தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் பிரபுதேவா. டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மகன். ஜெண்டில்மேன் வால்டர் வெற்றிவேல் சூரியன் பிரதாப் போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடிய பிரபுதேவா ஷங்கர் இயக்கத்தில் காதலன் படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். நக்மா ஜோடியாக நடித்திருந்தார்.
காதலன் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு பிரபல நாயகனாக பிரபுதேவா மாறினார். காதலன் படத்தில் பிரபுதேவாவின் நண்பராக நடித்தவர் வடிவேலு. தொடர்ந்து பல படங்களில் அவருடன் நடித்தார். குறிப்பாக ராசய்யா லவ் பேர்ட்ஸ் மனதை திருடிவிட்டாய் போன்ற படங்களில் பிரபுதேவா – வடிவேலு காமெடி காம்போ பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகி வெற்றி பெற்றது.
அதன்பிறகு டைரக்டரான நடிகர் பிரபுதேவா அவர் இயக்கிய போக்கிரி வில்லு ஆகிய படங்களில் காமெடி ரோலில் வடிவேலுவை நடிக்க வைத்தார். சினிமா நடிகர்கள் என்ற உறவையும் தாண்டி பிரபுதேவா வடிவேலு இடையே மிக நெருக்கமான அன்பும் நட்பும் இப்போதும் நீடித்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு ஒரு படத்தில் இணைந்து நடிக்க முடிவானது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் வடிவேலு நானும் பிரபுதேவாவும் விரைவில் இணைந்து நடிக்க இருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த படத்தை துபாயை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பதாகவும் இருந்தது.
ஆனால் இப்போது அந்த படம் டிராப் ஆகி விட்டதாக தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இப்போதைய நடிகர் வடிவேலுவின் இமேஜ்தான். நடிகர் வடிவேலு நடிப்பில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கேங்கர்ஸ் மாரீசன் போன்ற படங்கள் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலுக்கு தமிழில் போதிய வரவேற்பு ரசிகர்களிடம் இல்லை.
அத்துடன் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் தனுஷ் சிம்பு விக்ரம் போன்ற நட்சத்திர ஹீரோக்களின் படங்களே வசூலில் ஏமாற்றி விடுகின்றன. இன்றைய சூழலில் நடிகர் பிரபுதேவாவுக்கு தமிழில் பெரிய ரசிகர்கள் வரவேற்பு இல்லை. அதனால் பிரபுதேவா, வடிவேலு நடிக்கும் படம் பெரிய அளவில் வணிக ரீதியாக வெற்றி பெறாது என்று தயாரிப்பாளர் கண்ணன் ரவிக்கு தெரிய வந்ததால் அந்த படத்தை அவர் டிராப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.





