- Advertisement -
Homeபொழுதுபோக்குஆட்டோவில் வந்து இறங்கிய கவிஞர், ரஜினிகாந்த் செய்த தரமான சம்பவம் - சூப்பர் ஸ்டார்...

ஆட்டோவில் வந்து இறங்கிய கவிஞர், ரஜினிகாந்த் செய்த தரமான சம்பவம் – சூப்பர் ஸ்டார் பட்டம் எதுக்குன்னு தெரியுதா?

- Advertisement -

கவிஞர் பிறைசூடன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, ரஜினிகாந்த் நடித்த ராஜாதி ராஜா படத்தில் மீனம்மா மீனம்மா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆயிருந்த காலம். அந்தப் பாடலை எழுதிய என்னை சந்திக்க விரும்பினார் ரஜினி. நான் ஆட்டோவில் வந்ததை கண்டு காரில் வரவில்லையா? என்று கேட்டார். இல்லை. நான் விரும்பும் தமிழ் என்னை அங்கு தான் வைத்திருக்கிறது என்றேன். வீடு என்று அவர் கேட்டதற்கு அதுவும் இல்லை என்றேன். பின்னர் கலந்துரையாடி விட்டு கிளம்பும்போது ஒரு சூட்கேஸ் கொண்டு வந்து, வீடு கார் எல்லாம் வாங்கிக்கங்க என்று ரஜினி கைகளில் கொடுத்தார். இல்லை வேண்டாம். இன்று ஒரு நாள் இதை வாங்கிக்கலாம். ஆனால் எனக்கு உதவி செய்ய நினைத்தால் பாடல்கள் கொடுங்கள் என்று அதை வாங்க மறுத்துவிட்டேன். ரஜினி கொடுத்த அந்த பெட்டியில் அன்றைய தேதியில் 5 லட்சம் ரூபாய் இருந்திருக்கும். இப்போது அதன் மதிப்பு 5 கோடி ரூபாய்க்கு மேல். அப்படி ஒரு மனதை வேறு யாரிடமும் பார்க்க முடியாது என்று கவிஞர் பிறைசூடன் கூறியிருக்கிறார்.

சற்று முன்