நடிகர் ரஜினிகாந்த் இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். லைக்கா புரடக்சன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கேரளா திருவனந்தபுரத்தில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நடந்தது. ரஜினி, புவனா ஒரு கேள்விக்குறி படத்துக்கு பிறகுதான், பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது நான் இங்கு வந்திருக்கிறேன் என சந்தோஷமாக குறிப்பிட்டார்.
இதற்கிடையே அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். வரும் 9ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, திருவண்ணாமலையில் நடந்த போது, ரஜினிகாந்த் அங்கு கலந்துக்கொண்டார்.
சூப்பர் ஸ்டராக உள்ள ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக இருப்பதால், தமிழ்நாட்டில் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டால், ரசிகர்களின் தொல்லை மிக அதிகமாக இருக்கும். கூட்டம் கூட்டமாக வந்து ரஜினியை பார்க்க அவர்கள் காட்டும் ஆர்வத்தால் படப்பிடிப்பு தளத்தில் தேவையில்லாத பரபரப்பு ஏற்படும். பலவிதங்களில் படப்பிடிப்புக்குழுவுக்கு அது இடையூறாக இருக்கும் என்பதால் ரஜினி நடித்த பல படங்கள் கர்நாடகாவில்தான் அதிகமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
ஆனால் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி பகுதிகளில் வேட்டையன் ஷூட்டிங் சிறப்பாக நடந்தது. ரசிகர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். அதேபோல், லால் சலாம் படப்பிடிப்பிலும், ரஜினியை ரசிகர்கள், தொந்தரவின்றி பார்த்துக்கொண்டனர். இது ரஜினி நல்ல ஒரு உற்சாகத்தை தந்திருக்கிறது.
இந்நிலையில், தற்போது ஆந்திராவில் உள்ள ஐதராபாத்தில் மக்கள் நெரிசலான இடங்களில் வேட்டையன் படப்பிடிப்பு நடக்கிறது. ஆந்திராவில் ரஜினிக்கு வெறித்தனமான ரசிகர் கூட்டம் உள்ளது. அதுவும் நகர பகுதிக்குள், போக்குவரத்தான இடங்களில் எப்படி பிரச்னையின்றி ஷூட்டிங்கை நடத்துவது என படப்பிடிப்பு குழுவுக்கு ஒரு சவாலாக மாறியுள்ளது. சமீபத்தில் ஆந்திராவில் ரஜினி மருமகன் தனுஷ் நடித்த ஷூட்டிங்கால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால், ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





