- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் 173 படத்தில் தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் பார்க்கிங் பட இயக்குனர் - அப்போ...

தலைவர் 173 படத்தில் தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் பார்க்கிங் பட இயக்குனர் – அப்போ மறுபடியும் தில்லு முல்லு பண்ற ரஜினியை திரையில் பார்க்கலாமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது தனது 50வது ஆண்டு நிறைவு பொன்விழாவை கொண்டாடி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 1975ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான ரஜினிகாந்த் இதுவரை 171 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான கூலி அவரது 171வது படமாகும். இப்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படம் அவரது 172வது படமாகும்.

இந்த படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இதற்கு தலைவர் 173 என்று தற்காலிகமான பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இயக்குனர் சுந்தர் சி ரஜினி அவரது 173வது படத்தை இயக்க மறுத்து வெளியேறிய நிலையில் இந்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்னண் இயக்க உள்ளார்.

- Advertisement -

இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான நடிகர் கமல்ஹாசன் சொந்தமாக தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ரஜினி நடிக்கும் இந்த 173வது படம் ஏற்கனவே நடிகர் சிம்பு நடிக்க இருந்த கதையில் உருவாகிறது.

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த கதையில்தான் சிம்பு நடிக்க பல மாதங்களுக்கு முன்பே கமிட் ஆகி இருந்தார். ஆனால் அந்த படம் சில காரணங்களால் கைவிடப்பட்டதால், இப்போது சிம்புவுக்கு சொன்ன அதே கதையை ரஜினிக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து தலைவர் 173 படத்தை இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்ய உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. தலைவர் 173 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீசை தாடி இல்லாமல் கிளீன் ஷேவ் செய்த கெட்டப்பில் நடிக்க உள்ளார். ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் தில்லுமுல்லு என்ற படத்தில் மீசை இல்லாத கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல் பாபா படத்திலும் ரஜினி மீசை தாடி இல்லாமல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தில்லுமுல்லு படத்தில் தாடி மீசையின்றி ரஜினி முகத்தோற்றம் மிக அழகாக இருந்தது.

ஆனால் பாபா படத்தில் மீசை இல்லாத ரஜினி ஸ்டைல் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்த சூழலில் மீண்டும் நடிகர் ரஜினிகாந்த் மீசை தாடி இல்லாத கெட்டப்பில் நடித்தால் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் இது ஒரு நகைச்சுவை படம் என்பதால் சில காட்சிகளில் மட்டுமே ரஜினிகாந்த் இப்படி மீசை தாடி இல்லாமல் தில்லு முல்லு ரஜினி போல வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எந்திரன் படத்தில் சிட்டி கேரக்டர் ரஜினி மீசை தாடியின்றி அழகாக தான் இருந்தார். எந்த கெட்டப் என்றாலும் ரஜினி நடித்தால் அது மாஸ்தான் என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்