- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் ஜோடியாக நடிக்கும் பொன்னியின் செல்வன் பட நட்சத்திரங்கள்... பெண் இயக்குனரின் கைவண்ணத்தில் உருவாகும் காவியம்...

மீண்டும் ஜோடியாக நடிக்கும் பொன்னியின் செல்வன் பட நட்சத்திரங்கள்… பெண் இயக்குனரின் கைவண்ணத்தில் உருவாகும் காவியம்…

- Advertisement -

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என தமிழ் சினிமா துறையில் பல்வேறு காலகட்டங்களிலும் முயற்சி நடைபெற்றது. எம்ஜிஆர் இதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டும் கடைசி அது முடியாமல் போனது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பொன்னியின் செல்வன் திரைப்படம் படமாக்கப்பட இருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டே வந்தது.

ஆனால் இதனை கடைசியில் சாத்தியமாக்கியவர் இயக்குனர் மணிரத்னம் தான். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து முடித்தார் மணிரத்னம்.

நாவலில் இடம் பெற்றிருந்த சுவாரசியமான விஷயங்கள் இதில் இல்லை என்றாலும், விசுவலாக அது படமாக்கப்பட்ட விதத்திலும், ரசிகர்களுக்கு காட்சி மொழியாக அதனை விவரித்த பாங்கிலும் பாஸ் மார்க் பெற்றார் மணிரத்னம்.

விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் பல்வேறு தரப்பினால் பலவிதமாக பேசப்பட்டாலும் வசூலில் எந்த குறையும் வைக்காமல் சக்கை போடு போட்டது. குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. காட்சியில் பிரம்மாண்டம் வைக்கவில்லை என்றாலும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் அதனை ஈடு கட்டும் வகையில் அமைத்திருந்தார் மணிரத்னம்.

இது மட்டுமல்லாமல் ஏ ஆர் ரகுமானின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்தது. பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் பெரிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும், முதல் பாகமே தயாரிப்பு நிறுவனத்துக்கு வசூலை வாரி வழங்கியதால் அது பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. இப்படியான சூழலில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த இருவர் தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாரா அர்ஜுனும், இளம் வயது ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சந்தோஷையும் வைத்து புதிய திரைப்படம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மகள் சனா மரியான் தான் இந்த திரைப்படத்தை இயக்க இருக்கிறாராம். நடிகை குஷ்பு மற்றும் அவரது கணவரான சுந்தர் சி ஆகியோர் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரொமான்டிக் காதல் திரைப்படமாக இது உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்