- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு, கொச்சிக்கு புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் - விமான நிலையத்தில்...

ஜெயிலர் 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு, கொச்சிக்கு புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் – விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் செய்த தரமான சம்பவம்!

- Advertisement -

கோலமாவு கோகிலா டாக்டர் பீஸ்ட் படங்களை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ஜெயிலர். நடிகர் ரஜினிகாந்த் நடித்த இந்த படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் மிர்ணாள் மேனன் விநாயகன் வசந்த் ரவி யோகிபாபு சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

நடிகை தமன்னா காவலய்யா என்ற ஒரு சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து இப்போது ஜெயிலர் 2 படம் உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினி நெல்சன் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

- Advertisement -

முதல் பாகத்தை போலவே ஜெயிலர் 2 படத்திலும் மோகன்லால் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். மேலும் ரம்யா கிருஷ்ணன் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி சந்தானம் சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி எஸ்ஜே சூர்யா இருவரும் பிரதான வில்லன்களாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயிலர் 2 படப்பிடிப்பு தமிழ்நாடு கேரளா கர்நாடகா கோவா ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்தது. இந்த சூழலில் தற்போது ஜெயிலர் 2 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் கொச்சியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னையில் இருந்து கொச்சின் புறப்பட்டு சென்றார்.

- Advertisement -

கொச்சின் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்தை அங்கிருந்த சில ரசிகர்கள் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது ரசிகர் ஒருவர் தனது கையில் இருந்த பொட்டலத்தை பிரித்து அதிலிருந்த விபூதியை ரஜினியிடம் நீட்டினார். அப்போது சிரித்தபடி அந்த விபூதியை தொட்ட நடிகர் ரஜினிகாந்த், அந்த ரசிகரின் நெற்றியில் விபூதியை பூசி விட்டு பிறகு தனது நெற்றியிலும் அந்த விபூதியை பூசிக்கொண்டு சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இப்படி தனது ரசிகர்களின் மன உணர்வை தன்மீதான அன்பை புரிந்து கொண்டு ரஜினிகாந்த் அவரது ரசிகரின் நெற்றியில் விபூதியை பூசி விட்டு நடந்து சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது. சூப்பர் ஸ்டாராக இருந்த போதிலும் தனது ரசிகரின் அன்பை புரிந்துக்கொண்டு அதை ஏற்றுக்கொண்ட ரஜினியின் பண்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். வரும் அக்டோபர் 15ம் தேதி ஜெயிலர் 2 படம் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்