- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் ஆர்வத்தில் விஜய், பைக் ரேஸில் அஜீத்குமார், நடுவில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கல்லா கட்டும் சூப்பர்...

அரசியல் ஆர்வத்தில் விஜய், பைக் ரேஸில் அஜீத்குமார், நடுவில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கல்லா கட்டும் சூப்பர் ஸ்டார் – செம பிளான் தலைவரே!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு ஏப்ரலில் தமிழக வெற்றிக்கூட்டணி கட்சி மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு 2025ம் ஆண்டில் ஒரு படம் நடிப்பேன் என்று கூறியிருப்பதால் விஜய் நடிப்பு பயணம் தற்காலிகமாக பிரேக்கப் ஆகிறது. முழுக்க முழுக்க அவர் அரசியலில் ஈடுபாடு காட்ட துவங்குகிறார்.

நடிகர் அஜீத்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு, 4 மாதங்களாகியும் இன்னும் முடிந்தபாடில்லை. படப்பிடிப்பை நடத்துவது, சில நாட்கள் நிறுத்தி வைப்பது, மீண்டும் நடத்துவது, சில வாரங்கள் நிறுத்தி வைப்பது என தொடர்கிறது. இதில் அஜீத்குமார் – திரிஷா நடிக்க வேண்டிய ஏராளமான காட்சிகள் இருக்கின்றன. ஆனால் திரிஷா கால்ஷீட் கொடுத்த தேதியில் இவர்கள் படப்பிடிப்பை நடத்தவில்லை.

பொன்னியின் செல்வன் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு திரிஷாவுக்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் குவிகிறது. இப்போதைக்கு தமிழில் தக்லைபட், தெலுங்கில் 3 படம், மலையாளத்தில் 2 படம் என மொத்தம் 6 படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதுதவிர விடாமுயற்சியிலும் நடிக்கிறார். விடாமுயற்சி ஷூட்டிங் குளறுபடியால், மற்ற படங்களுக்கு ஒதுக்கிய கால்ஷீட் தேதிகளில், விடாமுயற்சி ஷூட்டிங்கில் நடிக்க வர முடியாமல் சிக்கலில் தவிக்கிறார்.

இந்த சூழலை பயன்படுத்திக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அவரது வண்டியை செம வேகத்தில் ஓட்ட ஆரம்பித்துள்ளார். விஜய் அரசியல் ஆர்வம், அஜீத் குமார் படங்களில் நடிப்பதில் ஆர்வமின்றி இருப்பதால் 73 வயதிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகிக்கொண்டு கல்லா கட்டுவதில் அதிக ஆர்வமாக இருக்கிறார். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப, இப்போது வருமானம் குவியும் நேரத்தை பயன்படுத்திக்கொள்கிறார்.

நடிகர் விஜய் அரசியல் ஆர்வத்தில் அந்த பக்கம் செல்கிறார். அஜீத்குமாரை பொருத்தவரை, சினிமாவில் நடிப்பதை பொழுதுபோக்கு, டைம் பாஸ் மாதிரி தான் வைத்திருக்கிறார். அவரது முழு ஆர்வமும் பைக்கில் ஊர், ஊராக சுற்றுவதுதான். பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்வற்றில் அவரது ஆர்வம் இருக்கிறது. ஆனால் ரஜினியை பொருத்தவரை இந்த நிமிடம் வரை சினிமா மட்டுமே அவரது குறிக்கோள். மன அமைதிக்கு ஆன்மிகம் தேடுகிறார்.

இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிக்கிறார். 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஏப்ரலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி 171 படப்பிடிப்பை துவங்குகிறார். அடுத்து ஜெயிலர் 2 படம், நெல்சன் இயக்குகிறார். அதன்பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி 173 படம் உருவாகிறது. அதன்பிறகு இயக்குநர் அட்லி இயக்கத்தில் ரஜினி 174 படம் என வரும் 3 ஆண்டுகளுக்கான 5 படங்களை இப்போது கைவசம் வைத்து நடித்து வருகிறார். இதனால் ரஜினி ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

சற்று முன்