ஜெயிலர் திரைப்படம் கடந்த பத்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி நடித்த அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்
தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களின் தோல்வியால், ரஜினிகாந்தும், அவரது ரசிகர்களும் ரொம்பவே துவண்டு போயிருந்தனர். இதனால் இந்த படத்தின் வெற்றி அவர்களுக்கு ரொம்பவே அவசியப்பட்டது. அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று பஞ்சாயத்தில் விஜயை கொண்டு வந்த ரேசில் நிறுத்தியதாலும் விஜயின் படங்கள் தொடர்ந்து 100 கோடி ரூபாய் வசூலித்து வருவதாக கோலிவுட்டில் தகவல்கள் பரவியதாலும், ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் நாற்காலி ஆட்டம் கண்டு விட்டதாக கோடம்பாக்கத்தில் இருந்து குரல்கள் எழ ஆரம்பித்தன.
எனவே ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் தான் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிக்க ரஜினிகாந்த் ரொம்பவே காத்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில் படம் வெளியாக இதுவரை 575 கோடி தாண்டி உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. எனவே ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார் என்பதை தலைவர் மீண்டும் நிரூபித்து விட்டார் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கின்றன
இதற்கிடையே படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செப்டம்பர் 7ஆம் தேதி மற்றும் சன் நெக்ஸ்ட் தளத்தில் ஜெயிலர் படமானது ரிலீசாகும் என தகவல்கள் வெளியானது. எனவே ஷாருக்கானின் ஜவான் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் ஜெயிலர் போட்டியில் ரிலீஸ் ஆவதால் ஷாருக்கானுக்கும் எங்கள் தலைவர் போட்டி கொடுத்து இருப்பதாக ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்தனர்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஓடிடி உரிமம் எவ்வளவு தொகைக்கு போனது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி அந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஏற்கனவே 570 கோடி ரூபாய் வசூரில் ஜெயிலர் எடுத்து விட்டதாகவும் தற்போது இந்த 100 கோடியையும் சேர்த்தால் ஆக மொத்தம் 700 கோடி வசூலித்து பொன்னியின் செல்வன் விக்ரம் ஆகிய படங்களில் லைஃப் டைம் வசூலை வெறும் ஒரே வாரத்தில் முடிவெடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக ஜெயிலர் படத்திற்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் 80 கோடி என்றும் அதே சமயம் படத்தில் வரும் லாபத்தில் பாதிக்கு பாதி தனக்கும் வேண்டுமென அக்ரிமெண்ட் போட்டதாகவும் அதனால் ரஜினியின் சம்பளம் ஜெயிலுக்கு 150 கோடி ரூபாயை நெருங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.





