- Advertisement -
Homeபொழுதுபோக்குபயங்கரவாதம் என்பது மனித குலத்தின் எதிரி - மும்பையில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்!

பயங்கரவாதம் என்பது மனித குலத்தின் எதிரி – மும்பையில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்!

- Advertisement -

கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரில் பகல்ஹாம் என்ற பகுதியில் திடீரென வந்த 4 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் அங்கு இருந்த சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் இந்தியா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா வான்வெளி பகுதியில் பாகிஸ்தான் விமானங்களும், பாகிஸ்தான் வான்வெளி பகுதியில் இந்திய விமானங்களும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

முப்படை பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வரும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளது. இந்தியா பாகிஸ்தான் நாடுகள் அமைதிக்கு திரும்ப வேண்டும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவுறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மும்பையில் மும்பையில் வேவ்ஸ் உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் நடிகர்கள் ரஜினிகாந்த் மோகன்லால் ஹேமமாலினி அக்சய் குமார் சிரஞ்சீவி மிதுன் சக்கரவர்த்தி மற்றும் அரசியல் பிரமுகர்கள் சினிமாத்துறையினர் தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது மற்றும் இரக்கமற்றது. பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு அமைதியை கொண்டுவரும் ஒரு போராளி. பொழுது போக்குகளில் கவனம் செலுத்துவதால் தேவையற்ற விமர்சனங்கள் காரணமாக அரசு இந்த 4 நாள் நிகழ்வை ஒத்தி வைக்க கூடும் என்று பலர் கூறினர். ஆனால் இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருந்தேன். அதன்படியே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பகல்ஹாம் தாக்குதல் மனிதத்தன்மையற்றது. இது முழு நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பயங்கரவாதம் என்பது மனித குலத்தின் எதிரி. இதை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். பிரதமர் மோடி போராளி. அவர் ஜம்மு காஷ்மீரில் நிலையான அமைதியை கொண்டு வருவார் என்று நடிகர் ரஜினிகாந்த் அந்த விழாவில் பேசினார்.

- Advertisement -

சற்று முன்