ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படம் மெகா ஹிட்டானது. ஜெயிலர் கொடுத்த வெற்றி ரஜினிக்கு ரொம்பவே முக்கியமாக பட்டது. இதனையடுத்து அதே உற்சாகத்தோடு தனது 170ஆவது படத்தில் களமிறங்கியிருக்கிறார். த.செ.ஞானவேல் இயக்கும் இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே ஞானவே ஜெய்பீம் படத்தை உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் உருவாக்கியிருந்தார். அந்தப் படம் சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. முக்கியமாக தமிழ்நாடு அரசின் கவனத்தையும் இருளர் இன மக்களின் பக்கம் திருப்பியது. இதனால் முதல் படத்திலேயே ஞானவேல் முக்கியமான இயக்குநர் என்ற பெயரை பெற்றார். மேலும் வரும் காலங்களில் காத்திரமான பல படைப்புகள் இவரிடமிருந்து வரலாம்.
இப்படிப்பட்ட சூழலில் தனது இரண்டாவது படத்தில் சூப்பர் ஸ்டாரை இயக்க கமிட்டானபோது ஒட்டுமொத்த கோலிவுட்டுமே ஆச்சரியம்தான்பட்டது. ஏனெனில் சமூக அக்கறையுள்ள இயக்குநர் ரஜினி போன்ற பெரிய ஸ்டாரை வைத்து சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்லும்பட்சத்தில் அதன் வீரியம் பல மடங்காக இருக்கும். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் கமிட்டாகியிருக்கின்றனர். பல வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்திருப்பதாலும் முதன்முறையாக ஃபகத் பாசில் ரஜினியுடன் இணைந்திருப்பதாலும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. குறிப்பாக மூன்று பேருமே நடிப்பு அரக்கர்கள் என்பதால் ஸ்க்ரீனில் மாஸுக்கும் க்ளாஸுக்கும் பஞ்சம் இருக்காது என்றே நம்பலாம்.
ரஜினிகாந்த் இதில் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்றும் போலி என்கவுண்ட்டருக்கு எதிராக குரல் கொடுப்பவராக வருகிறார் இஸ்லாமிய கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. நேற்று ஷூட்டிங்கிற்காக திருவனந்தபுரம் சென்ற ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்தப் படம் கருத்துள்ள பிரமாண்ட பொழுதுபோக்கு படமாக வரும் என தெரிவித்திருந்தார்.
#Superstar @rajinikanth lands in #Trivandrum for the shoot of #Thalaivar170 . The film produced by @LycaProductions and directed by @tjgnan will happen at Vellayani Agricultural University and a house in Shankumukham regularly used for Malayalam films. pic.twitter.com/Bv860yekW4
— Sreedhar Pillai (@sri50) October 3, 2023
இந்நிலையில் திருவனந்தபுரத்துக்கு சென்று சேர்ந்தார் ரஜினிகாந்த். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இன்று தொடங்கும் ஷூட்டிங் சில நாட்கள் நடக்கும் என்றும் பிறகு சென்னையில் அடுத்த ஷெட்யூல் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.





