விஜய் டிவியில் நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 9 இறுதிகட்டத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இப்போது இறுதி போட்டியாளர்களாக கானா வினோத் சாண்ட்ரா திவ்யா கணேஷ் விக்கல்ஸ் விக்ரம் சபரிநாதன் அரோரா ஆகிய இருந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் பழைய போட்டியாளர்கள் சிலர் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர். அந்த வகையில் வியானா திவாகர் பிரவீன்காந்தி பிரவீன் ராஜ் ஆகியோர் வந்துள்ளனர்.
அவர்களை தொடர்ந்து அடுத்ததாக திருநங்கை அப்சரா மற்றும் ரம்யா ஜோ ஆகியோரும் அடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் வர உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் மற்ற முன்னாள் போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் வர இருக்கின்றனர். ஆனால் இந்த 6 பேரில் ஒருவர்தான் டைட்டில் வின்னர் என்ற பரிசை பெறப் போகிறார். இதில் பைனலுக்குள் ஏற்கனவே அரோரா வந்துவிட்டார்.
இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் பணப்பெட்டி டாஸ்க் நடந்து வருகிறது. இதில் பணப்பெட்டியில் வைக்கப்படும் ஒரு பெரிய தொகையை எடுத்துக்கொண்டு 6 போட்டியாளர்களில் ஒருவர் வெளியேறி விடலாம். ஆனால் இது கட்டாயம் இல்லை. யார் வேண்டுமானாலும் பணப்பெட்டியுடன் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் வெளியேறி விடலாம் என்பது போட்டியின் விதிமுறையாகும்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வரும் விக்கல்ஸ் விக்ரம், பணப்பெட்டியை வைத்தால் நான் எடுத்துக்கொண்டு போய்விடுவேன். அந்த முடிவில்தான் நான் இருந்து வருகிறேன். எனக்குள் வீட்டுக்குள் இருக்க விருப்பமில்லை. முன்னாள் போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்து என்னை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் இப்போது வெளியான தகவலின்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து யாருமே எதிர்பார்க்காத வகையில் சபரிநாதன் பணப்பெட்டி டாஸ்க்கில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அந்த பெட்டியில் ரூ. 7 லட்சம் பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது யாருமே எதிர்பாராத ஒரு சம்பவமாக உள்ளது.
ஏனெனில் கார் டாஸ்க்கில் ஜெயித்து பைனலுக்கு போக வேண்டிய சபரி பேனிக் அட்டாக்கால் பாதிக்கப்பட்ட சாண்ட்ராவுக்காக காரை விட்டு இறங்கி ஓடி வந்தார். அவரது இந்த மனிதநேயம் பெரிய பாராட்டை வரவேற்பை பெற்றது. இப்போது மற்ற 5 போட்டியாளர்களுக்கு வழிவிடும் விதமாக அவராகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதும் ஒருவகை தியாகம்தான் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.





