- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு அடித்த லக்கி பிரைஸ், அட இதை யாருமே எதிர்பார்க்கலையே?...

அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு அடித்த லக்கி பிரைஸ், அட இதை யாருமே எதிர்பார்க்கலையே? – மோதிரக்கையால் குட்டு வாங்கியவராச்சே?

- Advertisement -

ரங்கூன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடித்த இந்த படம் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு நடிகர் சிலம்பரசன், கமல் படங்களை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த படங்கள் துவங்கப்படவில்லை.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பின், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்தார். இந்த படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடித்திருந்தார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி பலத்த வரவேற்பை, வெற்றியை பெற்றது.

- Advertisement -

அமரன் படத்தை நடிகர் கமல்ஹாசன், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அவரே தயாரித்திருந்தார். அமரன் படம் பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தனர்.

மேலும் இந்த படத்தில் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்ந்திருந்தார். வழக்கமாக காதல், காமெடி படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன், இந்த படத்தில் வேற மாதிரியான ஒரு கேரக்டரில் மிடுக்கான நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதே போல் சாய்பல்லவி நடிப்பும் வேற லெவலில் இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் உலகம் முழுவதும் ரூ. 325 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற அமரன் படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி, அங்கும் பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. ஓடிடியில் அமரன் படத்தை பார்த்த இந்தி பட தயாரிப்பாளர் பூஷன்குமார் அசந்து போயுள்ளார்.

உடனடியாக அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை தொடர்பு கொண்ட அவர், அவரது தயாரிப்பில் இந்தி படம் ஒன்றை இயக்க அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார். பான் இந்தியா படமாக இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2025ம் ஆண்டில் துவங்க உள்ளது. விரைவில் அறிவிப்பும் வெளியாக உள்ளது. தயாரிப்பாளர் கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படம் தந்த வெற்றியால் ராஜ்குமார் பெரியசாமிக்கு இந்தி படவுலகில் இருந்து வாய்ப்பு தேடி வந்திருப்பது மோதிரக்கையால் குட்டு வாங்கியது போல்தான்.

- Advertisement -

சற்று முன்