இந்தி திரைத்துறையில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ராமகோபால் வர்மா. இவர் பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்தவர். அதே நேரத்தில் அடிக்கடி ஏதேனும் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி அடிக்கடி விமர்சனங்களிலும் சிக்கிக் கொள்வது இவரது வழக்கமாக இருந்து வருகிறது.
தனது மனதில் பட்டதை எல்லாம் வெளிப்படையாக பேசக்கூடியவர் இயக்குனர் ராமகோபால் வர்மா. அதனால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி விடுகிறார். இப்போது நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் குறித்தும் அவர் ஒரு கருத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அது இப்போது வைரலாகி வருகிறது.
தமிழில் ரஜினி கமலுடன் பல படங்களில் நடித்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி. சிவாஜி எம்ஜிஆருடன் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர். 16 வயதினிலே வாழ்வே மாயம் மீண்டும் கோகிலா உள்ளிட்ட பல படங்களில் ஸ்ரீதேவி அந்த கேரக்டரில் வாழ்ந்திருப்பார். ஒரு கட்டத்தில் இந்திக்கு சென்ற அவர் அங்கும் முன்னணி நடிகையானார். அனில் கபூர் அண்ணன் போனி கபூரை காதல் திருமணம் செய்துக்கொண்டார்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இளைய மகள் குஷி கபூர். ஸ்ரீதேவி சில ஆண்டுகளுக்கு முன் மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பாத்ரூமில் இறந்து கிடந்தார். இது பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான படம் தேவரா. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நாயகனாக நடித்திருந்தார். என் டிஆருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானகி கபூர் நடித்திருந்தார். இந்த படத்தின் விழாவில் ஜூனியர் என்டிஆர் பேசும்போது, ஒரு சில காட்சிகளில் ஜான்வி கபூர் முகத்தில் நடிகை ஸ்ரீதேவியை பார்த்தேன் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ராம்கோபால் வர்மா, எனக்கு ஒன்றும் ஜான்வி கபூர் முகத்தில் ஸ்ரீதேவியை ஒரு சதவீதம் கூட பார்க்க முடியவில்லை. ஸ்ரீதேவியின் தோற்றம் என்பது அவரது நடிப்பாலும் திறமையாலும் வளர்ந்தது. அவரை பார்க்கும் போது நான் ஒரு இயக்குனர் என்பதையே மறந்து விட்டு ஒரு ரசிகனாக மாறிவிடுவேன். ஜான்வி கபூருக்கு அந்த அளவுக்கு திறமை இருக்கிறதா என்றால், நான் அம்மாவைதான் விரும்புகிறேன், அவரது மகளை அல்ல என்று ஓபனாக கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.





