- Advertisement -
Homeபொழுதுபோக்கு23 வயது இளைஞனாக உங்களை காண்பிக்கப் போகிறேன் என்று சொன்னதும் விஜய் அண்ணா கூறியது இதுதான்......

23 வயது இளைஞனாக உங்களை காண்பிக்கப் போகிறேன் என்று சொன்னதும் விஜய் அண்ணா கூறியது இதுதான்… சுவாரசியங்களை பகிர்ந்த இயக்குனர் வெங்கட் பிரபு…

- Advertisement -

விஜய் ரசிகர்கள் செப்டம்பர் 5ஆம் தேதிக்காக காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய திரைப்படம் என்பதால், இதனை மிகப்பெரிய அளவில் கொண்டாட அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் வருகிறது கோட் திரைப்படம்.

 

- Advertisement -

இதற்கான ட்ரெய்லர் நேற்று வெளியானது. முழுக்க முழுக்க கமர்சியல் தொகுப்பாக படம் எடுக்கப்பட்டிருப்பது அதன் ட்ரெய்லரை பார்க்கும்போதே நன்றாக தெரிந்தது. விஜய் மற்றும் இளவயது விஜய் என இரண்டு கதாபாத்திரங்களையும் வெங்கட் பிரபு கச்சிதமாக செய்திருப்பதாகவே தெரிகிறது.

 

- Advertisement -

மைக் மோகன் படத்தில் வில்லனாக நடித்திருப்பது உறுதியாகியிருக்கிறது. காந்தி என்னும் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருக்கிறார். டிரைலரைக் கண்டு களித்த விஜய் ரசிகர்கள், நிச்சயம் கோட் திரைப்படம் சொல்லி அடிக்கும் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் ட்ரெய்லர் வெளியீட்டுக்கு பின்பு, வெங்கட் பிரபு செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், அண்ணா உங்களை 23 வயது இளைஞனாக காட்டப் போகிறேன் என்று விஜய் அண்ணாவிடம் தெரிவித்தேன். அப்போது விஜய் அண்ணா, டேய் என்ன மாதிரி இல்லாம போயிற போகுது. அதை மட்டும் மெயின்டைன் பண்ணிக்கோ என்று கூறினார். ஸ்பார்க் பாடலில் விஜயின் தோற்றத்திற்கு பலரும் அதிருப்தி தெரிவித்தனர்.

 

இது எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது. இதனால் ட்ரெய்லரில், இளவயது விஜய்க்கான தோற்றத்திற்காக சில மெனக்கிடல்களை செய்தோம். எங்களுக்கு அது ஒரு பாடம். இப்போது நீங்கள் பெயரில் பார்க்கும் விஜய் தான், திரையிலும் இருப்பார். ஒரு பக்கா கமர்சியல் படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது.

 

கோட் திரைப்படத்தை பார்த்த அனைவருமே மகிழ்ச்சியாக உள்ளனர். விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு ட்ரீட்டாக இருக்கும். படத்தில் கெஸ்ட் ரோலில் சிலர் நடித்திருக்கலாம். பாடல்களுக்கு இங்கு கலவையான விமர்சனம் வந்தது. ஆனால் நீங்கள் அதனை படமாக பார்க்கும் போது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். டிரைலரை அஜித் சாருக்கு அனுப்பினேன். பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக தெரிவித்தார் என்று கூறியிருக்கிறார்.

 

 

- Advertisement -

சற்று முன்