- Advertisement -
நடிகர் ரன்பீர் கபூர் நடிகை சாய்பல்லவி நடிகர் யஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இராமாயண திரைப்படம் 14 நாட்களில் இந்தியாவில் 1009 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளில் 510 கோடி ரூபாய் என மொத்தமாக உலக அளவில் 1519 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. ரிலீஸ் ஆன 2 வாரங்களில் 1500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலைக் கடந்த முதல் படம் என்ற சாதனையை இராமாயணா படம் நிகழ்த்தியுள்ளது. இந்த படம் 2000 கோடி ரூபாய் வசூலை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய சினிமா ரசிகர்களிடையே எழுந்துள்ளது.





