முன்பெல்லாம் திரைப்பட இயக்குனர் என்றாலே அவர்களிடம் ஏராளமான கதைகள் கொட்டிக் கிடக்கும். போகிற போக்கில் 10 மாறுபட்ட கதைகளை சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நிறைய கதை ஞானம் இருந்தது. அதற்கு காரணம் அவர்கள் நிறைய புத்தகங்களை படித்தார்கள். பல வாழ்க்கை அனுபவங்களை நேரில் கண்டார்கள்.
அதனால் தான் கே பாக்யராஜ் பாரதிராஜா பாலு மகேந்திரா மகேந்திரன் போன்ற இயக்குனர்களின் படங்கள் தனித்துவமாக இருந்தன. கவிதை மொழியாக திரையில் பேசின. ஒவ்வொரு படமும் ரசிகர்களின் மனதை ஆழமாக தைத்தது. அந்த கதை மாந்தர்களின் வாழ்க்கை நம்முடன் வாழும் மனிதர்களை போல நெஞ்சை நெருடியது.
ஆனால் இப்போது உள்ள பல முன்னணி இயக்குனர்களிடம் கதை என்று கேட்டால் எங்கேயாவது இருந்து சுட்டு விட்டால் போகிறது என்ற அலட்சியமான மனப்போக்கில் தான் இருக்கின்றனர். பட்ஜெட்டை ஏற்றுக்கொள்ள தயாரிப்பாளர் கால்ஷீட் தர நடிகர் சம்மதித்தால் போதும். இயக்குனர் கதையே இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் அவல நிலைதான் இன்று உள்ளது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை கவனத்தை பெற்ற ஒரு படம் பார்க்கிங். வீட்டு காம்பவுண்டுக்குள் யார் காரை நிறுத்துவது என்ற ஈகோ தான் இந்த படத்தின் மையக்கரு. ஆனால் இந்த படம் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக இருந்து ஜெயித்தது. இதில் வில்லனாக நடித்த எம்எஸ் பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் தேசிய விருதும் கிடைத்தது.
பார்க்கிங் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் நடிக்கும் எஸ்டிஆர் 47 படத்தை டைரக்ட் செய்ய ராம்குமார் பாலகிருஷ்ணன் கமிட் ஆனார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்த நிலையில் சில காரணங்களால் எஸ்டிஆர் 47 படம் டிராப் ஆகி விட்டது. பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடிக்க சிம்பு கமிட் ஆகி போய்விட்டார்.
அதன்பிறகு ராம்குமார் பாலகிருஷ்ணன், நடிகர் ரஜினிகாந்திடம் கதை சொன்னார். எஸ்டிஆர் 47 படத்துக்காக சிம்புவிடம் சொன்ன அதே கதையை ரஜினிக்கு ஏற்றது போல சில மாற்றங்கள் செய்து சொன்ன நிலையில் ரஜினி நோ சொல்லி விட்டார். இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். சிம்பு மற்றும் ரஜினியிடம் சொன்ன அதே கதையை தான் சில மாற்றம் திருத்தங்களுடன் எஸ்கேவிடம் சொல்லி ஓகே செய்திருக்கிறார். ஒரே கதையை 3 ஹீரோக்களிடம் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்னது, இன்றைய இயக்குனர்களிடம் உள்ள கதை வறுமையை கற்பனை வறட்சியை எடுத்துக் காட்டுகிறது.





