- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஸ்டாரையே மிரட்டி பணிய வைத்த வில்லன் நடிகர், இனிமேல் அப்படி பண்ண மாட்டேன் என்று...

சூப்பர் ஸ்டாரையே மிரட்டி பணிய வைத்த வில்லன் நடிகர், இனிமேல் அப்படி பண்ண மாட்டேன் என்று அவரிடம் சொன்ன ரஜினி – இது வேற லெவல் சம்பவமாக இருக்கே?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் என்றாலே, மாஸ் தான். அவர் இப்போதும் புகழின் உச்சாணியில்தான் இருக்கிறார். 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை விட்டுக்கொடுக்காமல், சூப்பர் ஸ்டார் என்றாலே அது ரஜினிதான் என்று சொல்லும் அளவுக்கு 73 வயதிலும் இப்போதும் ஹீரோவாக நடிக்கிறார்.

தற்போது ரஜினி வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 வது படத்தில் ரஜினி நடிக்கிறார். அதன்பிறகு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க உள்ளார்.

- Advertisement -

இந்த படங்களை முடித்த பிறகு, அடுத்து அவர் மாரி செல்வராஜ் இயக்கும் ரஜினி 173 படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு 2025ல் துவங்கப்பட வாய்ப்புள்ளது. இந்த படத்துக்காக ரஜினி பெறப்போகும் சம்பளம் ரூ. 210 கோடி என இப்போதே முடிவாகி விட்டது.

ரஜினி நடிக்க வருவதற்கு முன்பே புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவர். தினமும் பல பாக்கெட் சிகரட்டுகளை ஊதி தள்ளுபவர். மதுப்பழக்கமும் கொண்டவர். தினமும் இரவில் மது அருந்தாமல், ஒரு காலகட்டத்தில் அவரால் தூங்கவே முடியாது. அதுபோல் அசைவமும் நிறைய சாப்பிடும் பழக்கம் கொண்டவர்.

- Advertisement -

இப்படி ஒரு சூழலில், ஐயப்ப மலைக்கு செல்லும் குருசாமியான எம் என் நம்பியாருடன், மாலை அணிந்துவிட்டு சபரிமலைக்கு செல்ல ரஜினி முடிவு செய்தார். ஆனால் மாலை அணிந்து விரதம் இருக்கும்போது சிகரட் புகைப்பது, மது அருந்துவது கூடாது என கட்டுப்பாடுகளை சொல்லியே அவருக்கு மாலை அணிவித்தார் வில்லன் நடிகர் எம்என் நம்பியார். ஆனால் ரஜினியால், சிகரட் பிடிக்காமல் இருக்க முடியவில்லை.

சபரிமலைக்கு மாலை அணிந்த பின், ரஜினி சிகரட் புகைப்பதை அறிந்த நம்பியார் மிகவும் கோபபட்டார். ரஜினியை நேரில் சென்று சந்தித்து, நீங்கள் கோவிலுக்கு வருவதற்கு தந்த 500 ரூபாய், உங்களை மாலை போட்டு சேர்த்துகிட்டதுக்கு எனக்கு அபராதம் ரூ. 500 என, 1000 ரூபாய் பிடியுங்கள் என்று கோபமாக, மிரட்டும் தொனியில் கூறியிருக்கிறார். என்னை மன்னிச்சிடுங்க, இனி சிகரட் பிடிக்க மாட்டேன் என்று உறுதி கூறி, பிறகு அவருடன் சபரிமலைக்கு சென்றிருக்கிறார் ரஜினி. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்