- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் வீட்டுக்குள் 3வது நாளிலேயே இப்படி ஒரு சண்டையா? ரவீந்தரை அடிக்கப் பாய்ந்த நடிகர் ரஞ்சித்...

பிக்பாஸ் வீட்டுக்குள் 3வது நாளிலேயே இப்படி ஒரு சண்டையா? ரவீந்தரை அடிக்கப் பாய்ந்த நடிகர் ரஞ்சித் – திணறிப் போன ஹவுஸ் மேட்ஸ், ஆரம்பமே அடிதடியா போகுதே?

- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஞாயிறு மாலை துவங்கியது. கமல்ஹாசனுக்கு பதிலாக நிகழ்ச்சி தொகுப்பாளராக வந்துள்ள விஜய் சேதுபதி, 18 போட்டியாளர்களை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். இதில் பேட் மேன் ரவீந்தர், நடிகர் ரஞ்சித், சீரியல் நடிகர்கள் தீபக், விஷால், அருண் பிரசாத், அர்னவ் மற்றும் ஜாக்குலின், சுனிதா, தர்ஷிகா போன்றவர்கள் பரிச்சயமானவர்களாக இருந்தனர்.

ஆனால் வீட்டுக்குள் போட்டியாளர்கள் நுழைந்த 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று பிக்பாஸ் அதிரடியாக அறிவித்த நிலையில், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்த சாச்சனா, போட்டியாளராக இருந்தார். அவரை மற்ற போட்டியாளர்கள் ஓட்டுப் போட்டு வெளியேற்றியது, பார்வையாளர்களை ஷாக் அடைய செய்தது.

- Advertisement -

ஏனெனில் போட்டியாளர்களில் மிகச் சிறிய பெண் அவர்தான். அதுவும் ஒரு பேச்சுக்கு என்னை வெளியேற சொன்னாலும் சென்று விடுவேன் என்று அவர் யதேச்சையாக, பேச்சுவாக்கில் சொன்னதை அப்படியே பிடித்துக்கொண்டு, அதையே காரணமாக சொல்லி அவரை மற்ற போட்டியாளர்கள் வௌியேற்றியது, அட அநியாயமே என்றுதான் பார்வையாளர்களை சொல்ல வைத்தது.

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்க முடியாமல் சிரமப்பட்ட பேட்மேன் ரவீந்திரை நடிகர் ரஞ்சித் ஒருபுறமும், சீரியல் நடிகர் அருண் பிரசாத் ஒருபுறமும் தாங்கிப் பிடித்து அழைத்து வந்து பெட்டில் அமர வைத்தனர். காலில் வீக்கம் இருப்பதாக ரவீந்தர் கூறிய நிலையில், அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விடுவாரா என்று பேச்சும் அடிபட்டது.

- Advertisement -

ஆனால் இப்போது வெளியான பிரமோ வீடியோ ஒன்றில் நடிகர் ரஞ்சித்தும், பேட் ரவீந்தரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொள்கின்றனர். அதுவும் போட்டியாளர்களுக்கு மத்தியில் அவர்கள் ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொள்வதை பார்த்தால், ஏதோ பிரச்னை என்பது மட்டும் உறுதியாகிறது.

பவித்ரா, விஷால் இடையே ஏற்பட்ட மோதலை சமாதானப்படுத்த வந்த ரஞ்சித், ரவீந்தர் ஒருவரை ஒருவர் கடுமையாக திட்டிக்கொண்டனர். நீ சண்டைக்கு வா என ரஞ்சித் அழைக்க, உன் வீட்டு வேலைக்காரன் நான் கிடையாது என ரவீந்தர், ஏய் நீ என்ன பண்ணிருவே என்று எகிறி பேசுகிறார். இதைக்கேட்டு ஆவேசமடைந்த ரஞ்சித் அவர் அருகே அடிக்க செல்ல, மற்ற போட்டியாளர்கள் அவரை தடுத்து நிறுத்துகின்றனர். இரு சீனியர் போட்டியாளர்கள் இப்படி மோதலில் ஈடுபடுவதை பார்த்து மற்றவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்பது அந்த பிரமோ வீடியோவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்