- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி படத்துக்காக பாலிவுட், மாலிவுட்டில் இருந்து திரளும் முக்கிய நட்சத்திரங்கள்... நீட்டாக ஸ்கெட்ச் போட்ட லோகேஷ்...

ரஜினி படத்துக்காக பாலிவுட், மாலிவுட்டில் இருந்து திரளும் முக்கிய நட்சத்திரங்கள்… நீட்டாக ஸ்கெட்ச் போட்ட லோகேஷ் கனகராஜ்…

- Advertisement -

ரஜினிகாந்திற்கு கடந்த ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சுமாரான கதையையும், மோசம் இல்லாத திரைக்கதையை இது கொண்டிருந்தாலும், படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது சிவராஜ் குமாரும் மோகன்லாலும்தான்.

இருவரும் வரும் காட்சிகளை, சரியான மாஸ் எலமெண்ட்களைக் கொடுத்து விசில் பறக்க வைத்திருந்தார் இயக்குனர் நெல்சன். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சிவராஜ் குமாரின் என்ட்ரி தாறுமாறாக இருந்தது. இதன் காரணமாக கன்னட சினிமாவிலும் ஜெயிலர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த ஃபார்முலாவை தனது அடுத்தடுத்த படங்களில் தொடர ரஜினி விருப்பப்பட்டு உள்ளார். தற்போது அவர் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்திலும் இது பயன்படுத்தப்பட்டு உள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடித்திருக்கிறார்.

இதேபோல் மலையாளத்திலிருந்து பகத் பாஸில் மற்றும் மஞ்சு வாரியர், தெலுங்கில் இருந்து ராணா, இதுபோக நடிகைகள் துஷாரா விஜயன் ரித்திகா சிங் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இப்படியான சூழலில், ரஜினிகாந்தின் 171 வது திரைப்படத்திலும் இது பின்பற்றப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயங்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில் வரும் 22 ஆம் தேதி படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. அத்துடன் டீசர் ஒன்றையும் வெளியிடுகிறார்கள்.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் 171 வது படத்தில் ரன்வீர் சிங் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல் மலையாளத்தில் இருந்து பிரிதிவிராஜ் அல்லது மம்முட்டி ஆகியோர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழில் ராகவா லாரன்ஸ் இதில் நடிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும் லோகேஷ் கனகராஜின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சற்று முன்