- Advertisement -
Homeபொழுதுபோக்குசுந்தர் சி வடிவேலு இணைந்த அடுத்த படம், தென்காசியில் ஷூட்டிங் விறுவிறு - அட படத்துல...

சுந்தர் சி வடிவேலு இணைந்த அடுத்த படம், தென்காசியில் ஷூட்டிங் விறுவிறு – அட படத்துல கதாநாயகி யாரு தெரியுமா? – இவங்க கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டாவே மாறிட்டீங்களா?

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், சில மாதங்களுக்கு முன் வெளியாகி சக்கைப் போடு போட்ட படம்தான் அரண்மனை 4. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து வெளியான தமிழ் படங்கள் எல்லாமே பிளாப் ஆன நிலையில், சில படங்கள் மட்டுமே ஓரளவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. ஆனால் அரண்மனை 4 படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

சுந்தர் சி இயக்கிய இந்த அரண்மனை 4 படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, விடிவி கணேஷ், சேஷூ, ஜெயப்பிரகாஷ், கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க கமிட் ஆன நிலையில், பிறகு அவரால் கால்ஷீட் தர முடியவில்லை.

- Advertisement -

அதனால் ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய கேரக்டரில் சுந்தர் சி நடித்தார். எனினும் அரண்மனை 4 படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. வசூலில் 100 கோடி ரூபாயை கடந்தது. மேலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிம்ரன், குஷ்பு பக்தி பாடலுக்கு நடனமாடியிருந்தனர் என்பதும் படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது.

அரண்மனை 4 படம் தந்த வெற்றியால் உற்சாகமான இயக்குனர் சுந்தர் சி, கலகலப்பு 3 படத்தை இயக்கும் திட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, அடுத்து அவரே நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்க தயாராகி விட்டார். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, நடிகர் வடிவேலு சுந்தர் சியுடன் இணைந்து நடிக்கிறார்.

- Advertisement -

வின்னர், தலைநகரம் உள்ளிட்ட படங்களில் சுந்தர் சி வடிவேலு கூட்டணி பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது. ஆனால் ஒரு படத்தில் சந்தானத்தை நடிக்க வைத்தார் சுந்தர் சி. இந்த விஷயம் வடிவேலுவுக்கு தெரியாமல் சுந்தர் சி செய்துவிட்ட நிலையில், கோபமடைந்த வடிவேலு, சுந்தர் சி படங்களிலேயே நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். வடிவேலுவிடம் குஷ்பு சமாதானம் பேசியும் அவர் பிடிவாதத்தை கைவிடவில்லை.

இந்நிலையில் இப்போது சுந்தர் சியுடன் கைகோர்க்க வடிவேலு சம்மதம் தெரிவித்துவிட்டார். சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில், நடிகர் வடிவேலு நடிக்கிறார். படம் முழுவதும் வருவது போல் அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அரண்மனை 3, அரண்மனை 4 படங்களில் நடித்த ராஷி கண்ணா, இந்த படத்திலும் சுந்தர் சிக்கு ஜோடியாக நடிக்கிறார். சுந்தர் சி இயக்கும் படங்களில் தொடர்ந்து ராஷி கண்ணாவுக்கு வாய்ப்பு தரப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்