நடிகை ராஷ்மிகா மந்தனா, கீதாகோவிந்தம் படத்தில் விஜய் தேவர கொண்டாவுடன் நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை, வரவேற்பை பெற்றவர். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்தது. தெலுங்கு படவுலகில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.
தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்த அவருக்கு, அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்த புஷ்பா படம், மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. பான் இந்தியா படமாக, இந்த படம் உலகம் முழுவதும் பெரிய அளவில் வசூலில் சாதனை புரிந்தது. அதன்பிறகு ராஷ்மிகாவுக்கு பிறமொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் வந்தன.
குறிப்பாக தமிழில், வாரிசு படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். ஆனால் அந்த படம் வசூலில் வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக பெரிய தோல்வியை சந்தித்தது. அதனால் தமிழில் பெரிய வாய்ப்புகளை அவரால் பெற முடியவில்லை. கார்த்தியுடன் நடித்த சுல்தான் படமும் ராஷ்மிகாவுக்கு பெரிய வரவேற்பை தரவில்லை.
இந்நிலையில், இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படத்தில் பெண்களை இழிவுபடுத்தும், பெண்களை அடித்து துன்புறுத்தும் தாக்கும் விதமான காட்சிகள் இருந்ததால், படம் கடும் விமர்சனத்தில் சிக்கியது. ஆனாலும், இந்த படத்தில் எக்கச்சக்கமான கவர்ச்சி காட்டி, ரசிகர்களின் மனதில் ராஷ்மிகா மந்தனா இடம்பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படம் ஒன்று உருவாகிறது. சிக்கந்தர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக சல்மான்கான் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா ரூ. 15 கோடி சம்பளமாக கேட்டிருக்கிறார். பிறகு தயாரிப்பு நிறுவனம் பேசி, ரூ. 13 கோடிக்கு ஓகே சொல்லியிருக்கிறது.
தமிழ் சினிமாவில், 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் நடிகைகள் நயன்தாரா, திரிஷா இருவரும்தான் அதிக சம்பளம் வாங்குபவர்களாக இருக்கின்றனர். ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி சம்பளமாக வாங்குகின்றனர். அவர்களேயே மிஞ்சும் அளவுக்கு சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா ரூ. 13 கோடி சம்பளம் வாங்குவது, கோலிவுட் சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





