நடிகை ராஷ்மிகா மந்தனா பல படங்களில் இப்போது நடித்துக்கொண்டு இருக்கிறார். கன்னட நடிகையான அவர், துவக்கத்தில் நடித்த சில படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து கீதா கோவிந்தம் படத்தில் அவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. மற்ற மொழிகளிலும் அந்த படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டார்.
தொடர்ந்து புஷ்பா படம் பிளாக் பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றதால் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி என மற்ற மொழிகளிலும் அவருக்கு சிறந்த நடிகையாக ஒரு அங்கீகாரமும் பிரபலமும் கிடைத்தது. இதையடுத்து வாரிசு படத்தில் விஜய் நடித்த வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்தார். ஆனால் படம் பெரிய அளவில் போகாததால், தமிழில் தொடர்ந்து ராஷ்மிகாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற ராஷ்மிகாவுக்கு அங்கும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு அமைந்தது. எனினும் தற்போது அனிமல் படத்தில் ரன்வீர் கபூருக்கு ஜோடியாக நடித்ததால் பாலிவுட் ரசிகர்களுக்கும் அவரை பிடித்துப் போய்விட்டது. தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு அமையலாம்.
தெலுங்கு நடிகர் விஜய் தேவர கொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து சில படங்களில் அவர்கள் இருவரும் ஜோடியாக நடித்ததால் இருவருக்கும் காதல் என்ற தகவல் பரவியது. ஆனால் இருவரும் அதை ஒருபோதும் மறுக்கவும் இல்லை. ஆனால், பகிரங்கமாக ஒத்துக்கொள்ளவும் இல்லை.
இந்நிலையில் சமீபத்தில் மாலத்தீவுக்கு தனித்தனி விமானங்களில் சென்ற விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் ஒன்றாக அங்கு சுற்றித் திரிந்துள்ளனர். அப்போது புகைப்படங்களும் எடுத்துள்ளனர். ரகசியமான அந்த புகைப்படங்களை ராஷ்மிகாவே சில தினங்கள் கழித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, அது சில மணி நேரங்களில் வைரலாகி விட்டது. அதன்பிறகு விஜய் தேவரகொண்டா திட்டியதால் அதை ராஷ்மிகா டெலீட் செய்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தை, தனது பிளான்படி அனைவருக்கும் தெரியப்படுத்தி விட்டார். அதனால் வரும் பிப்ரவரியில் இருவருக்கும் திருமணம் பெற்றோர்களால் உறுதி செய்யப்பட்டு விட்டது.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் கன்னட நடிகர் ரக்ஷ ஷெட்டியை ராஷ்மிகா மந்தனா காதலித்த நிலையில், நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது சினிமா வாய்ப்புகள் அதிகமாக வந்ததால் அவரை நிராகரித்துவிட்டு திருமணம் வேண்டாம் என நடிக்க வந்தவர்தான் ராஷ்மிகா. இப்போது மிக வசதியான பெரிய நடிகர் தன் வலைக்குள் விழுந்ததால், சில ஆண்டுகளில் தனது அழகு, இளமை காணாமல் போய்விடும் என்பதால், பல நூறு கோடிகளுக்கு அதிபதியான பிரபல நட்சத்திர நடிகர் திருமணம் செய்ய ஓகே செய்திருக்கிறார் ராஷ்மிகா என, சமீபத்திய நேர்காணலில் கூறியிருக்கிறார் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு.





