தனுஷ் நடிப்பில் கடைசியாக வாத்தி படம் வெளியானது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இடையில் சில காலம் தோல்வி முகத்தில் இருந்த தனுஷுக்கு திருச்சிற்றம்பலம் வெற்றியை பெற்று தந்தது. ஆனால் வாத்தி படத்தில் அந்த மொமண்ட்டத்தை தனுஷ் இழந்துவிட்டார் என அவரது ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.
அதேசமயம் அடுத்ததாக அவர் கமிட்டாகியிருக்கும் கேப்டன் மில்லர் படம் தங்களது கவலையை போக்கிவிடும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், ப்ரியங்கா அருள்மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம்தான் கேப்டன் மில்லர். பீரியட் படமாக உருவாகியிருக்கும் அந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிந்ததது. தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்துக்கு பிறகு தன்னுடைய 50ஆவது படத்தை தானே இயக்கி நடிக்கிறார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.
பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக வெற்றி பெற்ற தனுஷ் நிச்சயம் இந்தப் படத்தின் மூலமும் தான் ஒரு மிகச்சிறந்த இயக்குநர் என்பதை நிரூபிப்பார் என நம்பப்படுகிறது. வடசென்னையை கதைக்களமாக கொண்ட கதைக்காக மொத்தம் 100 வீடுகள் இருக்கும் செட்டுகள் அமைக்கப்படவிருக்கிறதாம். மொத்த படமுமே அந்த செட்டுக்குள்ளேயே நடக்கும்படிதான் தனுஷ் யோசித்திருக்கிறாராம்.
இதனையடுத்து சேகர் கம்முல்லாவின் இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ். வாத்தி படம் தெலுங்கில் தனக்கான மார்க்கெட்டை ஓபன் செய்யும் என நம்பியிருந்த தனுஷுக்கு வாத்தி சூடுதான் கொடுத்தது. எனவே சேகர் கம்முல்லாவின் இயக்கத்தில் நடிப்பதன் மூலம் நிச்சயம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்துவிடலாம் என அடுத்த கணக்கு போட்டிருக்கிறார். இதில் நாகார்ஜுனா உள்ளிட்டோரும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம். அதேசமயம் தனுஷ் 50ஆவது படத்தில் நடிக்க வைக்கத்தான் முதலில் பேச்சுவார்த்தை நடந்ததாம்.ஆனால் அவர் அப்போது ஹிந்தி படத்துக்கு ஏற்கனவே டேட் கொடுத்துவிட்டாராம்.அதனையடுத்து மீண்டும் தனுஷ் 51ஆவது படம் குறித்து பேச்சுவார்த்தை தொடங்க இந்த முறை மிஸ் பண்ணக்கூடாது என முடிவெடுத்து டேட்டுகளை எப்படியோ அட்ஜெஸ்ட் செய்து தனுஷ் 51க்கு கொடுத்திருக்கிறாராம் ராஷ்மிகா.





