- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான், ரன்னர் அவர் தான், கசிந்தது உண்மை தகவல், லேட்டஸ்ட்...

பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான், ரன்னர் அவர் தான், கசிந்தது உண்மை தகவல், லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் தொகுப்பாளராக நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பும், அங்கீகாரமும் துவக்கத்தில் இருந்தது. குறிப்பாக வித்யாசமான டாஸ்க் களில் வெற்றி பெற போட்டியாளர்கள் விளையாடுவதை பார்க்க விறுவிறுப்பாக இருக்கும். அந்த வகையில் அந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆனால் ஆண்டுக்கு ஆண்டு நிகழ்ச்சியின் தரமும், அதில் இருந்த விஷயங்களும் குறைந்துக்கொண்டே வந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களும் லோக்கல் ரவுடிகள் ரேஞ்சுக்கு தங்களுக்குள் வெட்டுவேன், குத்துவேன், சொருகிடுவேன் என்ற பேசுவதை எல்லாம் இந்த சீசன் 7 நிகழ்ச்சியில் தாராளமாக காண முடிந்தது.

- Advertisement -

கடந்த முறை, பிக்பாஸ் சீசன் 6ல் கடைசி வரை வந்த அறம் வெல்லும் என்ற விக்ரமன்தான் வின்னர் எதிர்பார்த்த நிலையில், அஸீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவர் வீட்டுக்குள் எந்நேரமும் சண்டை, சச்சரவு, பிரச்னை என நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கியதுதான் அவரது வெற்றிக்கு காரணம் எனத் தெரிய வந்தது.

அதனால் இந்த முறை வீட்டுக்குள் வந்தவர்கள், சண்டை செய்தால் தான் கப்பு கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்து, எந்நேரமும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், வசைபாடிக்கொண்டும், முறைத்துக்கொண்டும், ஜாடை மாடையாக பேசிக்கொண்டும் வன்மமாகவே காணப்பட்டனர். அதனால் அந்த நிகழ்ச்சியை பலரும் பார்க்க பிடிக்காத மனநிலைக்கு தள்ளப்பட்டனர்.

- Advertisement -

விசித்ரா தான் இருப்பதிலேயே பெஸ்ட், அவருக்குதான் டைட்டில் வின்னர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன் அவர் வெளியேறி விட்டார். அடுத்து வீட்டுக்குள் இருக்கும் அர்ச்சனாவுக்கு தான் வின்னர் டைட்டில் என எதிர்பார்த்தால், அதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. மாயாவும் இந்த லிஸ்ட்டில் இல்லை.

இப்போதைய லேட்டஸ்ட் நிலவரப்படி, இந்த பிக்பாஸ் சீசன் 7ல் டைட்டில் வின்னர் ஆக கமல் அறிவிக்கப் போகிற போட்டியாளர் யார் என்றால், ரவீணாவுடன் எந்நேரமும் ரொமான்ஸ் செய்துக்கொண்டு இருந்தாரே அவர்தான். மணிச்சந்திரா. அவர்தான் டைட்டில் வின்னர். அடுத்து ஒயில்டு கார்டில் வந்த தினேஷ்தான் ரன்னர். இதுதான் கடைசி கட்ட முடிவாக பிக்பாஸ் தீர்மானித்திருப்பதாக தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்