- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் நடித்த மறைந்த நடிகர் விஜயகாந்த், பிரேமலதாவிடம் தயாரிப்பாளர் கொடுத்த...

தி கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் நடித்த மறைந்த நடிகர் விஜயகாந்த், பிரேமலதாவிடம் தயாரிப்பாளர் கொடுத்த பெரும்தொகை – மறைந்த பிறகும் குடும்பத்துக்கு வாரி வழங்கிய வள்ளல்!

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வரலாற்றை எழுதியவர். ரஜினி, கமலுக்கு அடுத்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தில் இருந்தார். பல வெற்றிப் படங்களை தந்தவர். விஜயகாந்த் நடிப்புக்கு பெண் ரசிகர்கள் மிகவும் அதிகம். பி, சி சென்டர்களில் விஜயகாந்த் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருந்தது.

சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்த விஜயகாந்த், பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் இயக்கிய படங்களில் துணிச்சலாக நடித்தவர். ஆபாவாணன், ஆர்வி உதயகுமார் போன்றவர்கள் விஜயகாந்த் தந்த ஆதரவால், சினிமாவில் அடையாளம் காணப்பட்டவர்கள், அதுமட்டுமின்றி கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் பிலிம் இன்ஸ்டிடியூட் இயக்குனர்களின் படங்களையும் அதிகமாக தயாரித்து வாழ்வளித்தவர் கேப்டன் விஜயகாந்த்.

- Advertisement -

விஜயகாந்தை பொருத்தவரை எதிலும் துணிச்சலும், மனிதாபிமானமும் மிக்கவர். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் பதவி வகித்த காலகட்டத்தில், நடிகர் சங்கத்துக்கு இருந்த பெரிய கடனை அடைத்தார். இதற்காக துபாய், மலேசியா, சிங்கப்பூரில் நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகள் மூலம் பெரிய தொகை ஈட்டப்பட்டது. மீதம் ரூ. 1.75 கோடி சங்கத்தின் இருப்பாகவும் வைக்கப்பட்டது.

நடிப்பில், மனிதாபிமானத்தில், மற்றவர்களுக்கு உதவுவதில் விஜயகாந்த் சிறந்த மனிதராக, பண்பாளராக சிறந்து விளங்கினார். 2005ம் ஆண்டில் தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய விஜயகாந்துக்கு, தமிழக மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. பெரிய அளவில் தேர்தலில் ஓட்டுப் போட்டு மக்கள் அவருக்கு தங்களை ஆதரவை தெரிவித்தனர்.

- Advertisement -

ஆனால் நோய்வாய்பட்ட விஜயகாந்த், 2016ம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளாக நோயுடன் போராடிய நிலையில், கடந்த ஆண்டில் டிசம்பர் மாதம் 28ம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு பிறகு கேப்டனை கௌரவிக்கும் விதமாக நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் நடிக்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில தினங்களுக்கு நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் கல்பாத்தி அர்ச்சனா ஆகியோர் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று கேப்டனின் மனைவி பிரேமலதா, அவரது மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரை சந்தித்து பேசினர். அப்போது தி கோட் படத்தில் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் நடித்ததற்காக, ரூ. 50 லட்சம் பிரேமலதாவிடம் தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா வழங்கி இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்