- Advertisement -
Homeபொழுதுபோக்குசிபி சக்கரவர்த்தியுடன் சிவகார்த்திகேயன் இணையும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடி போடுவது இந்த நடிகைதான்... மற்றொரு மூத்த...

சிபி சக்கரவர்த்தியுடன் சிவகார்த்திகேயன் இணையும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடி போடுவது இந்த நடிகைதான்… மற்றொரு மூத்த நடிகையும் இருப்பதுதான் இங்கு சர்ப்ரைஸ்…

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டான். அட்லியின் உதவியாளரான சிபி சக்கரவர்த்தி இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். டாக்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு வெளிவந்த திரைப்படம் இது. தந்தை மகன் பாசத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

 

இருப்பினும் அதனை முழுக்க முழுக்க படத்தில் காட்டவில்லை. ஆரம்பத்தில் இருந்து நகைச்சுவை ஒன்றையே பிரதானமாக கையில் எடுத்து திரைக்கதையை வடிவமைத்து இருந்தார் சிபி சக்கரவர்த்தி. அது சரியாக ஒர்க் அவுட் ஆனது என்றே கூறலாம். கல்லூரி மாணவர் கதாபாத்திரத்திற்கு முழுமையான வடிவம் கொடுத்து, ஒட்டுமொத்தமாக படத்தை தோள்களில் சுமந்திருந்தார் சிவகார்த்திகேயன்.

 

அவருடன் சூரி பாலா உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களும் இணைந்து கொண்டு காமெடி செய்ய, படம் நன்றாகவே வந்தது. இதில் தந்தை கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருந்தார். கண்டிப்பான தந்தைக்கு பயப்படும் மகன் என்பதை மட்டும் ஆரம்பத்திலேயே காட்டிக் கொண்டிருந்த சிபி சக்கரவர்த்தி, இறுதியில் தந்தை இறப்பது போன்ற உருக்கமான காட்சியை வைத்திருந்தார்.

 

இது அந்த நேரத்தில் சரியாக ஒர்க் அவுட் ஆனதால், டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது முறையாக 100 கோடி ரூபாய் வசூல் என்னும் பெருமையையும் கொடுத்தது. கிட்டத்தட்ட 125 கோடி ரூபாய் அந்த திரைப்படம் வசூல் செய்திருந்தது.

 

அதேசமயம் டான் திரைப்படத்திற்கு எதிராக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. பாசம் என்ற பெயரில் மகனை எந்நேரமும் துன்பப்படுத்தும் டாக்ஸிக் தந்தையை எப்படி நீங்கள் இப்படி ஒரு வடிவம் கொடுத்து புகழ முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இயக்குனர் சிபி சக்கரவர்த்தியையும் கலாய்த்தனர். இந்த நிலையில் அவர் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்குவதாக இருந்தது.

 

ஆனால் அது கடைசி நேரத்தில் தடைபட்ட நிலையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து இருக்கிறார் சிபி சக்கரவர்த்தி. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. மிகவும் குறுகிய காலத்தில் இதனை எடுத்து முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ரம்யா கிருஷ்ணனும் படத்தில் இடம்பெற்று இருக்கிறாராம். முக்கியமான கதாபாத்திரங்கள் படத்தில் இருப்பதால் இப்போதே அதன் மீதான எதிர்பார்ப்பு எழத்தொடங்கி இருக்கிறது.

 

சற்று முன்