- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் புத்தாண்டிற்கு தரமான தகவலை விட்ட தமிழ் சினிமா... ஏப்ரல் மாதத்திலேயே ஒரே நாளில் மோதும்...

தமிழ் புத்தாண்டிற்கு தரமான தகவலை விட்ட தமிழ் சினிமா… ஏப்ரல் மாதத்திலேயே ஒரே நாளில் மோதும் இரண்டு முக்கிய திரைப்படங்கள்…

- Advertisement -

2024 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆன எந்த திரைப்படங்களும் அந்த அளவு மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான் கேப்டன் மில்லர் மற்றும் மிசன் சாப்டர் ஒன்று ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இருந்தன.

இதில் அயலான் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ஏலியன் கதை என்பதன் காரணமாக குடும்பங்கள் படத்திற்கு வரவேற்பு கொடுத்ததால், லாபமான திரைப்படமாக அயலான் மாறியது. அதேசமயம் கேப்டன் மில்லர் திரைப்படம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அருண் விஜயின் மிசன் சாப்டர் 1 திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் ரஜினிகாந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியானது. ஆனால் தொய்வான திரைக்கதை காரணமாக, இந்தத் திரைப்படம் வந்த தடம் தெரியாமல் மறைந்து போனது. இதே போல் சிறிய பட்ஜெட் திரைப்படங்களான லவ்வர் உள்ளிட்ட படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.

இப்படியான சூழலில் கடந்த சில வாரங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஜிவி பிரகாஷ் தான் தொடர்ந்து மூன்று வாரங்களாக படங்களை கொடுத்து வருகிறார். பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களும், தேர்தலுக்குப் பின்பே வெளியாக இருக்கிறது.

- Advertisement -

மலையாளத் திரைப்படங்களையும் சமீப காலமாக தமிழ்நாட்டு திரையரங்குகளை ஆக்கிரமித்து இருக்கும் சூழலில், வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டு முக்கிய திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலில் நாம் பார்க்கப் போவது விஷால் நடித்திருக்கும் ரத்னம் திரைப்படம். தாமிரபரணி பூஜை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷாலை வைத்து ஹரி இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இதேபோல், அரண்மனை படத்தின் நான்காவது பாகமும் வெளியாகிறது. இந்த பாகத்தில் தமன்னா, ராசி கண்ணா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த இரண்டு திரைப்படமுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்