- Advertisement -
Homeபொழுதுபோக்குடைரக்டர் ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படம் முதல் நாள் வசூல் எவ்வளவு...

டைரக்டர் ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? – கில்லியை முந்தியதா?

- Advertisement -

நடிகர் விஷால் நடிப்பில், டைரக்டர் ஹரி இயக்கத்தில் வெளியான படம் ரத்னம். ஏற்கனவே தாமிரபரணி மற்றும் பூஜை என இரண்டு படங்களில், ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கிறார். ரத்னம் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் நடித்த இந்த 2 படங்களுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தது.

நடிகர் விஷாலுக்கு, கடந்த பத்து ஆண்டுகளாகவே அவருக்கு படங்கள் சரியாக ஓடவில்லை, கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் விஷாலுக்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு, பெரிய அளவில் அந்த படத்துக்கு பக்கபலமாக இருந்து படத்தை வெற்றி பெறச் செய்தது.

விஷால் நடிக்க வந்த ஆரம்பத்தில், நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர். குறிப்பாக சண்டக்கோழி, அவன் இவன், துப்பறிவாளன், தாமிரபரணி, திமிரு, நான் சிவப்பு மனிதன், செல்லமே போன்ற படங்கள் அவருக்கு நல்ல வெற்றி படங்களாக இருந்தன. குறிப்பாக அவரது துப்பறிவாளன் படம் ஒரு திருப்புமுனையாக விஷாலுக்கு அமைந்தது.

இப்போது 3வது முறையாக டைரக்டர் ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் விஷால் நடித்திருக்கிறார். பெரும்பாலான நகரங்களில் பெரிய தியேட்டர்கள் கிடைக்காமல், சின்ன தியேட்டர் ரத்னம் படத்துக்கு ஒதுக்கப்பட்டதாக ஒரு தகவல் இருந்தது. ஏனெனில் கடந்த 20ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த கில்லி படம் ரிலீஸ் ஆன நிலையில், விஷால் படத்தை திரையிட போதிய எண்ணிக்கையில் பெரிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டது.

ஆனால் நேற்று விஷால் படம் ரிலீஸ் ஆன நிலையில், தமிழ்நாடு முழுவதும் 3 கோடி ரூபாய் மட்டுமே இந்த படம் வசூல் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அதுவும் ஒரு டிக்கெட் 200 ரூபாய் விலையில் விற்கப்பட்ட நிலையிலும், படத்துக்கு முதல் நாளில் ரூ. 3 கோடிதான் வசூல் ஆகியுள்ளது. ஆனால் மார்க் ஆண்டனி ரிலீஸ் ஆன போது, முதல் நாளில் 7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

சாமி, சிங்கம், வேல் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த டைரக்டர் ஹரி. அவரது இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் ரூ. 3 கோடி மட்டுமே முதல் நாளில் வசூலித்திருப்பது ஏமாற்றம்தான். அதே நேரத்தில் இந்த படத்தில் வழக்கமான ஹரி படங்களை விட, அதிக வன்முறை உள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால், விஜய் நடித்த கில்லி படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் முதல் நாளிலேயே ரூ. 4 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்