- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரவிமோகன் - பாடகி கெனிஷா ஜோடி, இப்படி புகையை ஊதித்...

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரவிமோகன் – பாடகி கெனிஷா ஜோடி, இப்படி புகையை ஊதித் தள்ளி பிரச்னையையும் பெருசா ஊதிட்டாங்களோ?

- Advertisement -

நடிகர் ரவிமோகன் ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே பெரிய வெற்றியை வரவேற்பை அவருக்கு பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இருந்து அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் செல்வாக்கை பெற்றுத் தந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு திடீரென நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். அதன்பிறகு கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தார். பிறகு தனது பெயரை ஜெயம் ரவி என்பதற்கு பதிலாக ரவிமோகன் என்றும் மாற்றிக்கொண்டார். பாடகி கெனிஷா என்பவருடன் நெருக்கமான நட்பில் இருந்தது அனைவரும் அறிந்த விஷயம்தான்.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் ரவிமோகன் கெனிஷா நட்பில் பிரிவு ஏற்பட்டதாகவும் ஒரு தகவல் பரவியது. ஆனால் நடிகர் ரவிமோகன் தயாரித்து டைரக்ட் செய்து வரும் இன் ஆர்டினரி மேன் என்ற படத்தின் இசையமைப்பாளரே கெனிஷா தான் என்றும் இந்த படம் மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் 10ம் தேதி நடிகர் ரவிமோகனின் பிறந்த நாள் என்பதால் கடந்த 5ம் தேதி மேடவாக்கத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் பேசிய நடிகர் ரவிமோகன், எனக்கு அரசியலுக்கு வருகிற விருப்பம் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வர வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் பாடகி கெனிஷாவுடன் கோவாவுக்கு சமீபத்தில் சுற்றுலா சென்றிருக்கிறார் நடிகர் ரவிமோகன். அங்கே ஒரு அறையில் ரவிமோகனும் கெனிஷாவும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ஒரு சுருட்டு போன்ற சிகரெட்டை இருவரும் மாறி மாறி புகைத்துக் கொள்கின்றனர். அதுவும் ஸ்டைலாக புகையை ஊதுகின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் போதை தரும் விதமாக சிகரெட்டை தான் ரவிமோகனும் கெனிஷாவும் மாறி மாறி புகைக்கின்றனர். ரவிமோகன் போதை பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார். இந்த பழக்கத்தில் இருந்து அவர் எப்படி மீண்டு வரப்போகிறார்? வளர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை, எடிட்டர் மோகன் என்ற கௌரவமான மனிதரின் மகன் என்ற பெருமைகளை இப்படி ரவிமோகன் சிதைக்கலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்