- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரவி மோகனுக்கு இயக்குனர் போட்ட திடீர் கண்டிஷன், இப்போதைக்கு வாய்ப்பில்ல ராஜா என மறுத்த...

நடிகர் ரவி மோகனுக்கு இயக்குனர் போட்ட திடீர் கண்டிஷன், இப்போதைக்கு வாய்ப்பில்ல ராஜா என மறுத்த ஹீரோ… – இதுக்கு பின்னால இப்படி ஒரு காரணமா…?

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாக நடிகர் ரவி மோகன் நடித்த படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. பெரிய அளவில் வெறறி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட அகிலன் இறைவன் சைரன் 108 பிரதர் காதலிக்க நேரமில்லை என தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான படங்கள் நடிகர் ரவி மோகனுக்கு தோல்வி படங்களாகவே அமைந்து விட்டன.

இதற்கிடையே அவர் தனது மனைவியை பிரிந்தது, கோர்ட்டில் நடந்து வரும் விவாகரத்து வழக்கு மற்றும் பாடகி கெனிஷாவுடன் அவர் கொண்டிருக்கும் நெருக்கமான நட்பு போன்ற விஷயங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன. எனினும் முன்னாள் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யும் உறுதியான முடிவில் இருப்பதாக ரவி மோகன் திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

- Advertisement -

இப்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகும். இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீலீலாவும் முக்கிய கேரக்டரில் நடிகர் அதர்வாவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் ரவிமோகன் நடித்து வருகிறார்.

பராசக்தி படத்தை தொடர்ந்து நடிகர் ரவிமோகன் நடிக்கும் படம் கராத்தே பாபு. இந்த படத்தை கவின் நடித்த டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு டைரக்ட் செய்கிறார். சில வாரங்களுக்கு முன் கராத்தே பாபு படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் கராத்தே பாபுவாக எம்எல்ஏ கேரக்டரில் ரவி மோகன் சட்டசபையில் பேசுவது போல காட்சி இருந்தது அதிக கவனம் பெற்றது.

- Advertisement -

கராத்தே பாபு படத்தில் 3 வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போன்ற கதைக்களம் இருப்பதாகவும் அதில் 3 விதமான வெவ்வேறு கெட்டப்களில் நடிகர் ரவி மோகன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் ஒரு கேரக்டரில் 12 கிலோ எடை குறைந்த தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கணேஷ் கே பாபு நடிகர் ரவி மோகனிடம் கூறியிருக்கிறார்.

இப்போது பராசக்தி படத்தில் நடித்து வருவதால், இப்போது உள்ள இதே தோற்றத்தில் இதே எடையில் நான் இருந்தாக வேண்டும். அதனால் இப்போதைக்கு எடையை குறைக்க முடியாது. பராசக்தி படப்பிடிப்பை முடித்த பிறகுதான் 12 கிலோ உடல் எடையை குறைக்க முடியும் என்று ரவி மோகன் கூறியிருக்கிறார். அதற்கு இயக்குனரும் ஓகே சொல்லி விட்டனர். ஏற்கனவே பேராண்மை படத்தில் உடல் எடையை குறைத்து ரவிமோகன் நடித்திருந்நது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்