- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் பாலாவிடம் இருந்து இந்த விஷயத்தை இயக்குனர் ஷங்கர் கற்றுக் கொள்வாரா? கேம் சேஞ்சர் படம்...

இயக்குனர் பாலாவிடம் இருந்து இந்த விஷயத்தை இயக்குனர் ஷங்கர் கற்றுக் கொள்வாரா? கேம் சேஞ்சர் படம் தோல்விக்கு முக்கிய காரணமே அதுதானா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் ஷங்கர். ஜெண்டில் மேன் படம் துவங்கி காதலன் இந்தியன் முதல்வன் அந்நியன் நண்பன் சிவாஜி எந்திரன் 2.0 பாய்ஸ் ஜீன்ஸ் என அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன. ஆனால் கடைசியாக வெளியான அவரது இந்தியன் 2 படமும் பெரிய தோல்வியடைந்தது.

இப்போது நேரடி தெலுங்கிலும் தமிழ் மற்றும் இந்தியில் டப்பிங்கில் வெளியான படம் கேம் சேஞ்சர். தெலுங்கு நடிகர் ராம்சரண் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அஞ்சலி எஸ்ஜே சூர்யா சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த கேம் சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்கி உள்ளார்.

- Advertisement -

கடந்த 10ம் தேதி வெளியான இந்த படம் 6 நாட்களாகியும் இன்னும் 200 கோடி வசூலை கூட தொடவில்லை. அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 அளவுக்கு கேம் சேஞ்சர் படம் பெரிய ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இந்தியன் 2 படத்தையும் இந்தியன் 3 படத்தையும் ஒன்றாக ஷங்கர் இயக்கி அதில் ஏற்பட்ட குழப்பம்தான் இந்தியன் 2 படத்தின் படுதோல்விக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. அதே போல் 5 மணி நேர படமாக உருவான கேம் சேஞ்சர் படத்தில் இருந்து 2 மணி நேர காட்சிகளை அகற்றிவிட்டு, படத்தை ஷங்கர் ரிலீஸ் செய்திருக்கிறார். இதில் படத்தில் வரவேண்டிய பல நல்ல காட்சிகளும் போய்விட்டதாக ஷங்கரே ஒரு நேர்காணலில் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

வணங்கான் படம் பிரமோசனுக்காக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பாலா, நான் ஷாட் பை ஷாட்டாக காட்சிகளை எழுதி தான் எடுப்பேன். எழுதிய காட்சிகளை விட எக்ஸ்ட்ராகவாக எடுக்க மாட்டேன். பேப்பரிலேயே எனக்கு எடிட்டிங் ஆகிவிடும். அதனால் எடிட்டிங் ரூமில் படக்காட்சிகளை குறைப்பது 200 அடி 300 அடி கூட இருக்காது. எடுத்த காட்சிகள் அப்படியே படத்தில் வந்துவிடும். வீணாக நிறைய காட்சிகளை எடுத்து பிறகு அதை ரிலீஸ் நேரத்தில் நீக்குவது மனசுக்கு கஷ்டத்தை தரும் என்று கூறியிருக்கிறார்.

ஒரு அனுபவப்பட்ட கவனம் மிக்க ஒரு இயக்குனராக இந்த கருத்தை பாலா கூறியிருக்கிறார். நிச்சயமாக படத்தை தாறுமாறாக எடுத்து பிறகு 1 மணி நேரம் 2 மணி நேரம் காட்சிகளை நீக்கும், அவற்றை தூக்கி எறியும் இயக்குனர் ஷங்கர் மட்டுமல்ல வெற்றிமாறன் போன்றவர்களும் இந்த விஷயத்தில் இயக்குனர் பாலாவிடம் கற்றுக்கொள்வது மிக முக்கியம் என்கின்றனர் ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்