இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் நடித்த கேம் சேஞ்சர் படம் வருகிற ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது, பான் இந்தியா படமான இதில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்திருக்கிறார். முக்கிய கேரக்டரில் அஞ்சலி, வில்லனாக எஸ்ஜே சூர்யா இந்த படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, உத்தரபிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ராம் சரண், எஸ்ஜே சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். கேம் சேஞ்சர் எடிட்டிங் பணியில் இருந்ததால், இயக்குனர் ஷங்கர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
வருகிற ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகை நேரத்தில் கேம் சேஞ்சர் ரிலீஸாகிறது. தில் ராஜூ தயாரிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய பான் இந்தியா படம் கேம் சேஞ்சர் என்பதால், அந்த சமயத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த பல படங்கள், டிசம்பர் மாதத்திலும், அல்லது பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களிலும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.
இந்த சூழலில், நடிகர் விக்ரம் நடித்த வீரதீர சூரன் படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. ஏனெனில் பண்ணையாரும், பத்மினியும், சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருப்பதால், இந்த முடிவில் படக்குழுவினர் இருந்தனர்.
ஆனால் இப்போது எதற்கு தேவையில்லாத ரிஸ்க் என முடிவு செய்த வீர தீர சூரன் படக்குழுவினர், பொங்கல் பண்டிகை போட்டியில் இருந்து விலகி, பிறகு படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இப்படி விக்ரம் படம் ஒதுங்கி கொண்டதை அடுத்து இயக்குனர் பாலா அதிரடியான திடீர் முடிவுக்கு வந்துள்ளார்.
அதன்படி இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் வாய் பேசாத கேரக்டரில் நடித்துள்ள வணங்கான் படத்தை வருகிற ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் செய்ய பாலா முடிவு செய்துள்ளார். அருண் விஜய் நடிப்பில், பாலா இயக்கும் வேறொரு ஜானர் படமாக இது இருப்பதால், கேம் சேஞ்சர் படத்தால் வணங்கான் படம் எந்த விதத்திலும் பாதிக்காது என்பதால், அவர் வணங்கான் படத்தை கேம் சேஞ்சர் படம் வெளியாகும் அதே நாளில் ரிலீஸ் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.





