- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்துல நடிச்சது எனக்கு அப்செட் தான், ரொம்பவும் அதிருப்தி தான் நான் என்ன செய்வது?...

கூலி படத்துல நடிச்சது எனக்கு அப்செட் தான், ரொம்பவும் அதிருப்தி தான் நான் என்ன செய்வது? – வெளிப்படையாக பேசிய நடிகை!

- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் அனிருத் காம்போவில் உருவான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கனவுகள் இருந்தது. ரூ. 1000 கோடி வசூலை அள்ளும் என்றும் பேசப்பட்டது.

மேலும் இந்த படத்தில் 36 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் சத்யராஜ் இணைகிறார். தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா கன்னட நடிகர் உபேந்திரா மலையாள நடிகர் சௌபின் சாஹிர் இந்தி நடிகர் அமீர்கான் மற்றும் ஸ்ருதிஹாசன் ரக்சிதா ராம் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைகிறது என்று ரசிகர்கள் தரமான சம்பவத்தை எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் கூலி படம் வெளியாகி முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரஜினி ரசிகர்களே, என்னய்யா இது படம் என்று அதிர்ச்சியாக கேள்வி கேட்கும் அளவுக்கு ஒரு சொதப்பலான படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தந்திருந்தார். அனிருத் இசையில் 2 பாடல்கள், பூஜா ஹெக்டே நடனம் வில்லனாக சௌபின் சாஹிர் மட்டுமே பாஸ் மார்க் வாங்கியிருந்தனர்.

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் சத்யராஜ். அவருக்கு 3 மகள்கள். அதில் ஸ்ருதிஹாசன் தான் ரஜினியின் மகள். ஆனால் கடைசி வரை அதை ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசனிடம் சொல்ல மாட்டார். அதே போல் ரஜினியின் மகள் சத்யராஜிடம் ஏன் வளர்கிறார் என்பதை படம் பார்த்த ரசிகர்களுக்கு இயக்குனரும் சொல்லியிருக்க மாட்டார். இப்படி ஒரு லாஜிக்கே இல்லாத படம் இது.

- Advertisement -

கூலி படத்தில் சத்யராஜின் மகள்களில் ஒருவராக வருபவர் தான் ரெபா மோனிகா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர், கூலி படம் பார்த்தபோது நீங்கள் என் தோழி என்று என் பெற்றோரிடம் பெருமையாக சொன்னேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த ரெபா மோனிகா, என்ன சொல்வது? நான் அப்செட் ஆனேன். அதிர்ச்சி அடைந்தேன். நான் கூலியில் பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. ஆனால் அது என் கையில் இல்லை .சில விஷயங்கள் நாம் நினைத்தபடி நடக்காது. ஆனால் தலைவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோஷப்படுகிறேன். தலைவருடன் நடித்தது தான் முக்கியம். கூலிக்காக என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று அந்த பதிவில் கூறி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்