தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த 23ம் தேதி நடந்த நிலையில் வருகிற மே 4ம் தேதி தமிழகத்தில் உள்ள 62 மையங்களில் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்படும் நிலையில் 8.30 மணியளவில் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட உள்ளது.
வழக்கமாக திமுக அல்லது அதிமுக இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சிதான் ஆட்சிக்கு வருவது தமிழகத்தில் வழக்கமாக நடந்து வருகிறது. கடந்த சில தேர்தல்களாக நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் 234 தொகுதிகளில் போட்டியிட்டாலும் அவரது கட்சி வேட்பாளர்கள் 10 ஆயிரம் வரை தொகுதி வாரியாக ஓட்டுகள் வாங்கினாலும் ஒருவர் கூட ஜெயித்தது இல்லை.
ஆனால் இந்த முறை அந்த கணக்கு மாறும் என்று தெரிய வந்துள்ளது. அத்துடன் இந்த முறை திமுக அதிமுக கட்சிகளுக்கு மாபெரும் எதிர்ப்பாக களத்தில் குதித்திருந்தது தமிழக வெற்றிக் கழகம் தான். அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய்க்கு கூடிய கூட்டமும் மக்கள் ஆதரவும் செல்வாக்கும் நிச்சயமாக பெரிய கலக்கத்தை திமுக அதிமுக கட்சியினருக்கு ஏற்படுத்தியது உண்மை.
இந்த சூழலில் இப்போது தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் விசில் சின்னத்துக்கு மக்கள் தரப்பில் பெரிய ஆதரவும் வரவேற்பும் இருந்த நிலையில் கருத்து கணிப்புகளில் திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் எதிர்கட்சியாக அதிமுக வரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 125 முதல் 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதே போல் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 65 முதல் 80 இடங்களில் வெற்றி பெறும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் 18 முதல் 24 தொகுதிகளில் ஜெயிக்கும் என்றும் நாம் தமிழ் கட்சி 2 முதல் 6 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
இந்த கருத்து கணிப்பு முற்றிலும் சரியானதா, மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் தான் முதல்வராக தொடர்கிறார் என்பது உண்மைதானா என்பதை இந்த முந்தைய கருத்து கணிப்புகள் மட்டுமே முடிவு செய்ய முடியாது. வருகிற மே 4ம் தேதி பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு மையம் வாரியாக வெளியாக உள்ள தேர்தல் முடிவுகளில் தான் மக்களின் தீர்ப்பு என்ன என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஒருவேளை கருத்து கணிப்புகள் பொய்த்து போகவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.





