- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென தள்ளி வைக்கப்பட்ட டாக்ஸிக் படம் ரிலீஸ்… பலத்த ஏமாற்றத்தில் ரசிகர்கள் - இதற்கு பின்னால்...

திடீரென தள்ளி வைக்கப்பட்ட டாக்ஸிக் படம் ரிலீஸ்… பலத்த ஏமாற்றத்தில் ரசிகர்கள் – இதற்கு பின்னால் இப்படியும் சில காரணங்களா?

- Advertisement -

மலையாளத் திரைப்பட நடிகை மற்றும் பிரபல திரைப்பட இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கேஜிஎஃப் நாயகன் யஷ் நடிப்பில் உருவான படம் டாக்ஸிக். கடந்த 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடந்த போதைப் பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்சன் கதைக்களத்தில் திரில்லர் படமாக டாக்ஸிக் படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தில் நடிகைகள் நயன்தாரா பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஹூமா குரேஷி தாரா சுதாரியா அக்சய் ஒபராய் மற்றும் ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து தனித்தனி போஸ்டர்களை படக்குழு ஏற்கனவே வெளியிட்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

டாக்ஸிக் படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற 19ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஈரான் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதட்டம் காரணமாக இந்த படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டாக்ஸிக் படம் வருகிற ஜூன் மாதம் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது ஏறக்குறைய 2.5 மாதங்களுக்கு பிறகுதான் இந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என்ற இந்த அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் போன்ற மற்ற மொழி சினிமா ரசிகர்களுக்கும் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

டாக்ஸிக் படம் ரிலீஸ் தள்ளிப் போக வளைகுடா நாடுகளில் நடந்து வரும் போர் மட்டுமே முக்கிய காரணம் அல்ல என்றும் தெரியவந்துள்ளது. ஏனெனில் வருகிற 19ம் தேதி துரந்தர் 2 படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை பிவிஆர் ரிலீஸ் உரிமம் பெற்றுள்ளதால் பெரும்பாலான பிவிஆர் தியேட்டர்களில் அகன்ற திரைகளில் துரந்தர் 2 வெளியாகும் என்பதால் டாக்ஸிக் படத்துக்கு பெரும்பாலான தியேட்டர்களில் பெரிய திரை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

மேலும் டாக்ஸிக் படம் பெரிய நட்சத்திர ஹீரோ நடித்த பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்ட போதிலும் இதுவரை இந்த படத்தின் சாட்டிலைட் உரிமம் டிஜிட்டல் உரிமம் விற்பனை நடக்கவில்லை. எதிர்பார்த்த அளவுக்கு நான் தியேட்டரிக்கல் வருமானமும் இல்லை. அதன் காரணமாகவும் டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதியை ஜூன் 4ம் தேதிக்கு படக்குழு தள்ளி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

சற்று முன்