- Advertisement -
Homeபொழுதுபோக்குவித்யாசமான கெட்டப்களில் திறமை காட்டியிருக்கும் நடிகர் அருண் விஜய் - முத்தையா இயக்கத்தில் உருவாகும் இருளன்...

வித்யாசமான கெட்டப்களில் திறமை காட்டியிருக்கும் நடிகர் அருண் விஜய் – முத்தையா இயக்கத்தில் உருவாகும் இருளன் படம் அருணுக்கு சூப்பர் கம்பேக் தருமா?

- Advertisement -

சீனியர் நடிகர் விஜயகுமார் மகன் அருண் விஜய். தமிழில் பல படங்களில் நடித்தும் இன்னும் நட்சத்திர அந்தஸ்தை அவர் பெறவில்லை. இந்நிலையில் நேதாஜி ப்ரொடக்சன்ஸ் சண்முகவேல் பாண்டியன் தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இருளன் என்ற படம் உருவாகி வருகிறது. நடிகர் அருண் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இருளன் படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் அருண் விஜயின் சினிமா கேரியரிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் இருளன் படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கெட் அப்களில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் அருண் விஜய்க்கு ஒரு சூப்பர் கம்பேக் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்