- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் கே பாக்யராஜ் சிபிஐ அதிகாரியாக நடித்த கடைசி படம் - வரும் செப்டம்பர் மாதம்...

இயக்குனர் கே பாக்யராஜ் சிபிஐ அதிகாரியாக நடித்த கடைசி படம் – வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் என தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் திரைக்கதை ஆசிரியர் வசனகர்த்தா தயாரிப்பாளர் பாடகர் இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் கே பாக்யராஜ். தனது இயல்பான நடிப்பு காமெடி கலந்த திரைக்கதை குடும்ப உறவுகளின் உணர்வுகளை மையப்படுத்திய படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

சமீபத்தில் அவர் திடீரென மறைந்தது தமிழ் சினிமா துறையினரையும் சினிமா ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 73 வயதில் திடீரென மாரடைப்பால் அவர் மறைந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவரது குருநாதர் பாரதிராஜா மறைந்த 17வது நாளில் அவரது சீடரும் மறைந்து விட்டார் என்பதும் சோகமானது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் பாக்யராஜ் கடைசியாக நடித்த ட்ரூ ஸ்டோரி என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உணர்ச்சிபூர்வமான நினைவு பரிசாக அமையும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இந்த படத்தில் ஒரு சிபிஐ அதிகாரியாக பாக்யராஜ் நடித்துள்ளார்.

திரைப்பட கல்லூரி மாணவர் சித்திரை செல்வன் என்ற இயக்குனர் இயக்கி இந்த படத்தை ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். மர்மமான ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரியாக பாக்யராஜ் நடித்திருக்கிறார். ஒரு சிக்கலான கொலை சம்பவத்தில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கும் துப்பறியும் அதிகாரியின் பயணமே இந்த படத்தின் மையக் கதையாக உள்ளது.

- Advertisement -

குறிப்பாக நான் சிகப்பு மனிதன் படத்துக்கு பிறகு மீண்டும் துப்பறியும் கேரக்டரில் கே பாக்யராஜ் இந்த படத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சைனி கோஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் சுமன் விக்னேஷ் இளவரசு சுப்புராஜ் ஸ்ரீரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

ரங்கீலா எண்டர்பிரைசஸ் சார்பில் குமார் தட்சிணாமூர்த்தி இந்த படத்தை தயாரித்துள்ளார். ட்ரூ ஸ்டோரி படத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கே பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு வெளியாகும் அவரது கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு தனி எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவரது திரைப் பயணத்தை நினைவு கூறும் வகையில் ட்ரூ ஸ்டோரி ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத ஒரு படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்