- Advertisement -
நடிகர் அஜீத்குமார் நடிக்கும் 64வது படம் டேர்டெவில் படத்தின் துவக்க விழா பூஜை நேற்று சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜீத்குமார் உடன் பணியாற்றிய அவரது படங்களை இயக்கிய இயக்குனர்கள் எச் வினோத் ஏஎல் விஜய் சரண் வெங்கட் பிரபு ஏஆர் முருகதாஸ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் அஜீத்குமார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தனது மனைவி ஷாலினி பெயரில் அஜீத்குமார் சொந்தமாக தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படத்தின் பூஜையில் அஜீத்குமார் பங்கேற்கவில்லை. அவரது மனைவி ஷாலினி மேனேஜர் சுரேஷ் சந்திரா ஆகியோர் தான் இந்த விழாவில் முன்னிலை வகித்தனர்.





