- Advertisement -
தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நடிகர் சரத்குமார் மிக விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக பாஜக வட்டாரத்திலிருந்து ஒரு முக்கிய லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1996ம் ஆண்டில் சரத்குமார் துவங்கிய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்த பின்பு தனக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படவில்லை என நடிகர் சரத்குமார் கூறி வந்தார். இந்த நிலையில் அவருக்கு தற்போது மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே குஷ்பு மாநில துணைத் தலைவராக பாஜகவில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.





