- Advertisement -
Homeபொழுதுபோக்குரொம்ப அசிங்கமா போச்சு குமாரு, நடிகர் சரத்குமார் சொன்னதுக்காக இப்படியா? - கடைசியில நாட்டாமை குடும்பத்தை...

ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு, நடிகர் சரத்குமார் சொன்னதுக்காக இப்படியா? – கடைசியில நாட்டாமை குடும்பத்தை நாற அடிச்சுட்டாங்களே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சரத்குமார். சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை கடந்த 1996ம் ஆண்டில் துவங்கிய அவர் அரசியலில் பெரிய வரவேற்பை பெற முடியாத சூழலில் சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து விட்டார். தொடர்ந்து படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே சமீபத்திய பார்லிமென்ட் தேர்தலில் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா சரத்குமாரும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதனால் தமிழக சட்டசபை தேர்தலில் சரத்குமார் போட்டியிடுவதை தவிர்த்த நிலையில் தொடர்ந்து பாஜக ஆதரவாளராக இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடிகர் சரத்குமார் பங்கேற்ற தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் தனது ஆதரவாளர்கள் ரசிகர்கள், நாட்டாமை குடும்பம் என அவர்களது கையில் பச்சை குத்திக் கொண்டால் தன்னை வெகு எளிதாக சந்திக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

நான் இப்போது ஷூட்டிங்கில் இருப்பதால் அந்த படத்தை முடித்துவிட்டு நானும் நாட்டாமை குடும்பம் என பச்சை குத்திக் கொள்வேன் என்றும் கூறினார். அதே நேரத்தில் இது கட்டாயம் இல்லை. விருப்பம் இருந்தால் மட்டுமே இப்படி நாட்டாமை குடும்பம் என பச்சை குத்தி கொள்ளலாம். இதை என்னை சந்திக்க ஒரு கிரீன் கார்டு போல உதவும் என்றும் நடிகர் சரத்குமார் தெளிவுபடுத்தினார்.

- Advertisement -

இது தற்போது இணையத்தில் படு வைரலாகி கடுமையான சர்ச்சையை சந்தித்து வருகிறது. இதை பார்த்த சிலர், நாட்டாமை டீச்சர் குடும்பம் என பச்சை குத்திய புகைப்படங்களை வெளியிட்டு நடிகர் சரத்குமாரை கலாய்த்து வருகின்றனர். ஏனென்றால் நாட்டாமை படத்தில் டீச்சர் கேர்கடரில் நடித்தவர் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சிலர், திரிஷா குடும்பம் நயன்தாரா குடும்பம் காஜல் அகர்வால் குடும்பம் என வரிசையாக பச்சை குத்தியும் நடிகர் சரத்குமாரை கிண்டலடித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். நான் ஒரு பக்கம் ஸ்டீரியங்கை திருப்புனா அது வேற ஒரு பக்கமாக வண்டி போகுதேடா என்று நடிகர் பாலசரவணன் குட்டிப்புலி படத்தில் பேசிய டயலாக் போல, நடிகர் சரத்குமாரின் முயற்சி வேறு மாதிரியாக போய்விட்டது. இந்த விவகாரத்தில் ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு என நடிகர் சரத்குமாரை இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்