தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்து நடித்துக்கொண்டு இருப்பவர் விஜயகுமார். இப்போதும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் விஜயகுமார் நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா நாட்டாமை நட்புக்காக சேரன் பாண்டியன் போன்ற படங்களில் விஜயகுமார் நடிப்பு வேற லெவலில் இருந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். பிரியம் என்ற படம் மூலம் கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்தார். ஆனால் பாண்டவர் பூமி வணங்கான் தடம் என்னை அறிந்தால் என சில படங்கள் மட்டுமே அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. சமீபத்தில் வெளியான இட்லி கடை படத்திலும் அருண்விஜய் நடித்திருந்தார்.
இந்த நிலையில் மான் கராத்தே கெத்து போன்ற படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ரெட்ட தல என்ற படத்தில் அருண் விஜய் நடித்தார். இந்த படத்தில் 2 வேடங்களில் அவர் முதன்முறையாக நடித்திருக்கிறார். படத்தில் சித்தி இத்னானி தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரெட்ட தல படம் வெளியானது. இந்த படத்தின் இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்குனர் ஏஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ரெட்ட தல டைட்டில் கூட ஏஆர் முருகதாஸ் அவரது படத்துக்கு வைக்க திட்டமிட்ட நிலையில் கிரிஷ் திருக்குமரன் கேட்டதால் கொடுத்து விட்டதாக சமீபத்தில் கூட கூறியிருந்தார்.
இந்நிலையில் ரெட்ட தல படம் அருண் விஜய்க்கு ஒரு சூப்பர் கம்பேக் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படம் முதல் நாளில் ரூ. 75 லட்சம் மட்டுமே வசூலித்தது. இப்போது 3 நாட்களில் இந்த படத்தின் மொத்த வசூல் 1.8 கோடி ரூபாய் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் ரெட்ட தல படத்துடன் ரிலீஸான சிறை படம் ரூ. 4 கோடியை கடந்து வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது.
நடிகர் சிவாஜி கணேசனின் மகன் பிரபு. அவரது மகன் விக்ரம் பிரபு. சிவாஜி கணேசனின் பேரன் என்ற பெருமைக்குரியவர். நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற சிறப்புக்கு உரியவர் விஜயகுமார். 2 பேருமே நட்சத்திர குடும்பங்களை சேர்ந்தவர்களாக உள்ள நிலையில் விக்ரம் பிரபு நடித்த சிறை, அருண் விஜய் நடித்த ரெட்ட தல படத்தை வசூலில் முந்திவிட்டது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.





