- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படத்தை பார்த்து விட்டோம்... பில்டப் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து விட்டோம்.... படத்தின்...

கருப்பு படத்தை பார்த்து விட்டோம்… பில்டப் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து விட்டோம்…. படத்தின் இயக்குனரே இப்படி சொன்னால் எப்படி…

- Advertisement -

சூர்யாவுக்கு கடந்த மே மாதம் வெளியானது ரெட்ரோ திரைப்படம். கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். காதல் ஆக்சன் என அனைத்தும் சரியான மீட்டரில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதில் பலரும் அந்த திரைப்படத்தை வரம்புக்கு மீறி கிண்டல் செய்தனர். இப்படி ட்ரோல் செய்யும் அளவுக்கு அந்த படம் இல்லை என்று பலரும் கூறினர்.

இது ஒரு பக்கம் இருக்க கலவையான விமர்சனத்தை ரெட்ரோ பெற்று இருந்தாலும், அது வசூல் ரீதியாக லாபத்தையே கொடுத்தது. இதனைத் தொடர்ந்து சூர்யா அடுத்ததாக நடித்திருக்கும் திரைப்படத்தின் பெயர்தான் கருப்பு. இதனை ஆர் ஜே பாலாஜி இயக்கி இருப்பதுதான் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து இருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே இவர் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அது பேண்டஸி படமாக எடுக்கப்பட்டது. அதேபோன்று கருப்பு திரைப்படத்திலும் பேண்டஸி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்திலும், அதேசமயம் கருப்பசாமி கதாபாத்திரத்திலும் வருவார் என்று திரைத்துறை வட்டாரத்தில் பேசுகிறார்கள்.

கோயில் தொடர்பான வழக்கை முன்னிலைப்படுத்தியே இந்த திரைப்படம் இருக்கும் என்று பேச்சு எழுந்திருக்கிறது. முதலில் திரிஷாவை வைத்து மாசாணி அம்மன் என்னும் பெயரில் இந்த திரைப்படத்தை எடுக்க ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டு இருந்தாராம். பிறகு அது வேறு வடிவில் மாற சூர்யாவுக்காக புதிதாக கதையை மாற்றம் செய்து, கருப்பு என டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதற்கான பட பூஜை பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்றது.

- Advertisement -

இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இதற்கு மெட்டு போட்டு உள்ளார். லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த சுவாசிகா, கருப்பு காவியத்திலும் இருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அந்த திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது. இந்த நிலையில், அது குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார், இயக்குனர் ஆர் ஜே பாலாஜி.

அதில் தீபாவளிக்குதான் இந்த திரைப்படத்தை திரையிட வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்த்ததாகவும் ஆனால் அது நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். படத்தை நான் பார்த்து விட்டேன். இப்போதெல்லாம் பில்டப் செய்தால் யாருக்கும் பிடிப்பதில்லை. அதனால் நான் எதுவும் பேச மாட்டேன். எனது தயாரிப்பாளர்களும் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாகவே கூறினார்கள். படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்