- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையன் படம் காண தயாராகும் அஜீத்குமார் ரசிகர்கள், ஏன் தெரியுமா? அட இந்த கோணத்துல...

வேட்டையன் படம் காண தயாராகும் அஜீத்குமார் ரசிகர்கள், ஏன் தெரியுமா? அட இந்த கோணத்துல யாருமே யோசிக்கலையே? – போட்றா வெடிய!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வருகிற 10ம் தேதி ரிலீஸாகிறது. ஜெயிலர் படம் தந்த மெஹா ஹிட்டை தொடர்ந்து ரஜினிகாந்த் ஹீரோ நடிப்பில் உருவான வேட்டையன் படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ரஜினி படமாக இல்லாமல், தசெ ஞானவேல் படமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏனெனில் வழக்கமான ரஜினி படங்களில் ஓவரான பில்டப் காட்சிகள் இருக்கும். ரஜினியை காட்டும்போதெல்லாம் ரசிகர்களின் வெறித்தனத்தை தூண்டும் விதமான கெத்து, மாஸ் காட்சிகளை தேவையே இல்லாமல் கொண்டு வருவது இப்போதைய கமர்ஷியல் இயக்குனர்களின் டிரண்டிங் ஆக இருக்கிறது.

இப்போதும் ரஜினி தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், என் நடிப்பை வெளிப்படுத்த வேண்டிய நல்ல கதையம்சம் உள்ள படங்களை, கதைகளை கொடுங்கள் என்று கூறுவதில்லை. கமர்ஷியல் என்ற பெயரில் நான் ஹீரோயிசம் காட்டும் படங்களை, கதைகளை உருவாக்குங்கள். அதுதான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என சொல்லி, பில்டப் காட்சிகளில் மட்டுமே நடித்து ஜெயித்துக்கொண்டே இருக்கிறார்.

ஆனால் வேட்டையன் படம் அதில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜெய்பீம் படம் இயக்கிய தசெ ஞானவேல், இந்த படத்தில் என்கவுண்டர் குறித்த பிரச்னையை கையில் எடுத்திருப்பதால் அதற்கேற்ப கதை மெதுவாக தான் நகரும். மற்ற கேரக்டர்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையன் படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனம்தான், விடாமுயற்சி படத்தையும் தயாரித்துள்ளது. இப்போது விடாமுயற்சி படத்தின் டீசரை இயக்குனர் மகிழ்திருமேனி தயார் செய்துவிட்டதாக தெரிகிறது. அதனால் வேட்டையன் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் எல்லாம் விடாமுயற்சி படத்தின் டீசரை வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில், இன்னும் உறுதியாக முடிவு செய்யப்படவில்லை. ஆனால் ஏற்கனவே மெய்யழகன் படம் ரிலீஸான தியேட்டர்களில் எல்லாம், கங்குவா படத்தின் டீசரை வெளியிடுவதாக ஒரு தகவல் பரவியது. அதே போல் இப்போது வேட்டையன் படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் எல்லாம் விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அஜீத்குமார் ரசிகர்களும் வேட்டையன் படம் பார்க்க தயாராகி வருகின்றனர்.

சற்று முன்