தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. அருந்ததி ருத்ரமாதேவி பாகுபலி வேட்டைக்காரன் சிங்கம் என பல வெற்றிப் படங்களில் நடித்தவர் அனுஷ்கா. கடைசியாக இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். இந்த படத்தின் கதை நாயகி குண்டாக இருப்பதால் திருமணம் அவருக்கு தடைபடுவதுதான் கதைக்களம்.
அதனால் கதையின் நாயகி அனுஷ்கா உடல் எடையை அதிகரித்தால் குண்டான தோற்றத்தில் இந்த படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதே நேரத்தில் படத்துக்காக குண்டான உடல் தோற்றத்துக்கு மாறிய அனுஷ்காவுக்கு பிறகு உடல் எடை குறையவே இல்லை. யோகா தியானம் உணவு கட்டுப்பாடு உடற்பயிற்சி என எது செய்தும் உடல் எடை குறையவில்லை.
அதனால் 40 வயது பெண்மணி போன்ற தோற்றத்துக்கு மாறிய அனுஷ்காவுக்கு தொடர்ந்து சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் படங்களில் நடிக்காத நிலையில் மீண்டும் இப்போது நடிக்க ஆரம்பித்திருக்கிறார். மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நிலையில், 2 ஆண்டுகள் கழித்து அனுஷ்கா நடிப்பில் கடந்த 5ம் தேதி திரைக்கு வந்த படம் காதி.
இந்த படத்தில் நடிகை அனுஷ்காவுடன் விக்ரம் பிரபு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். காதி படத்தின் ரிலீஸ் தேதி இரண்டு மூன்று முறை அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த தேதியை மாற்றிய நிலையில், இறுதியாக கடந்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி படத்தை ஒருவழியாக வெளியிட்டார்கள். ஆனால் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.
காதி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் அனுஷ்கா பங்கேற்கவில்லை. படத்தில் கமிட் ஆன போதே பிரமோசன் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்று அனுஷ்கா கூறிவிட்டார். காதி படம் முதல் நாளில் ரூ. 2 கோடி வசூலித்தது. 2வது நாளில் 1.5 கோடி வசூலித்தது. அதன் பிறகு லட்சங்களில் தான் இந்த படத்தின் வசூல் இருந்து வருகிறது.
கடந்த 5 நாட்களில் காதி படத்தின் மொத்த வசூல் 7.5 கோடி ரூபாய் மட்டுமே ஆகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவானது. ஆனால் 10 கோடி ரூபாய் கூட இந்த படம் வசூலை எட்டவில்லை. இதுவரை நடிகை அனுஷ்கா நடித்த படங்களிலேயே இந்த படம்தான் மிக மோசமான தோல்வியையும் பலத்த நஷ்டத்தையும் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.





