- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை தொலைச்சுப்புடுவேன் என்று மிரட்டினார், சீனியர் நடிகர் சிவக்குமார் குறித்து பகிரங்கமாக குற்றம் சாட்டிய நடிகர்...

என்னை தொலைச்சுப்புடுவேன் என்று மிரட்டினார், சீனியர் நடிகர் சிவக்குமார் குறித்து பகிரங்கமாக குற்றம் சாட்டிய நடிகர் மணிகண்டன் – என்ன ப்ரோ சொல்றீங்க?

- Advertisement -

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டு இருப்பவர் நடிகர் மணிகண்டன். காதலும் கடந்து போகும் காலா ஜெய்பீம் குட் நைட் லவ்வர் படங்களை தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள குடும்பஸ்தன் படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் எனத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றியை மணிகண்டன் தந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் மணிகண்டன் நடிக்க வருவது முன்பு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருந்தவர். ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் விஜய் சேதுபதி டெல்லி கணேஷ் ஜனகராஜ் சிவக்குமார் என பல நடிகர்களின் குரலில் பிசிறு தட்டாமல் பேசக்கூடிய திறமை மிக்க மிமிக்ரி கலைஞராகவும் இருக்கிறார்.

- Advertisement -

அதே நேரத்தில் மணிகண்டன் ஸ்கிரிப்ட் ரைட்டாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் மணிகண்டன் பங்கேற்கும் நேர்காணல்களில் பல நடிகர்களின் குரலில் பேசி அசத்துகிறார். அதேபோல் முக்கிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் ஏதேனும் சில காட்சிகள் மட்டும் வசனங்கள் பேச வேண்டி இருந்தால், அதற்கு மணிகண்டனை அழைத்தால் அவர் சென்று டப்பிங் பேசி வருகிறார்.

இதற்கு முறைப்படி குறிப்பிட்ட அந்த நடிகரிடம் தகவல் தெரிவித்து அவர் அனுமதித்தால் மட்டுமே அவரது குரலில் டப்பிங் பேசுவேன் என்ற தகவலையும் மணிகண்டன் கூறியிருக்கிறார். நடிகர் மணிகண்டன் சீனியர் நடிகர் சிவக்குமாருக்கும் அவருக்கும் இருக்கும் நட்பு குறித்து வெளிப்படையாக சமீபத்தில் கூறியிருக்கிறார்

- Advertisement -

குடும்பஸ்தன் படம் பிரமோசனுக்காக நேர்காணலில் நடிகர் மணிகண்டன் பங்கேற்று பேசினார். அப்போது நடிகர் சிவக்குமார் குறித்து அவர் பல விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அவர் குறித்து மணிகண்டன் கூறியதாவது, நடிகர் சிவக்குமார் என்மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர். அடிக்கடி என்னை நலம் விசாரிப்பார். இலக்கிய ஆர்வம் கொண்டவர் என்பதால் நிறைய புத்தகங்களை தந்து என்னை படிக்கச் சொல்வார்.

ஒருமுறை என்னிடம் பேசும் போது, ஏண்டா டீ காபி நிறைய குடிக்கறியாமா, என்ன என்று கேட்டார். ஆமா சார் சினிமாவுல என்றேன். இனிமே டீ காபி நாக்குல பட்டுதுன்னா தொலைச்சுப்புடுவேன் தெரிஞ்சுக்க என்றார். ஸாரி சார் என்றேன். எதுக்குடா உனக்கு டீ காபி? திருக்குறள் புக் படிச்சியா? இன்னும் படிக்கலையா, உனக்கு புக் கொடுத்து எத்தனை மாசம் ஆச்சு? என்று மிரட்டும் தொனியில் என்னிடம் அன்பு காட்டி சிவக்குமார் பேசுவார் என்று நடிகர் மணிகண்டன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்