கடந்த 1992ம் ஆண்டில் செம்பருத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ரோஜா. அவரை அந்த படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. தொடர்ந்து அவரது இயக்கத்தில் பல படங்களில் ரோஜா நடித்திருக்கிறார். இதற்கிடையே ஆர்கே செல்வமணிக்கும் ரோஜாக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளாக ஆந்திரா அரசியல் களத்தில் இருந்த நடிகை ரோஜா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் 2 முறை எம்எல்ஏவாகவும் ஒருமுறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். இப்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் ரோஜா நடிக்க வந்திருக்கிறார். அவரது நடிப்பில் அன்பே டயானா என்ற படம் சமீபத்தில் வெளியானது. தொடர்ந்து பல படங்களில் நடிகர் ரோஜா கமிட்டாகி வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, நீங்க தெலுங்கு படங்கள் பார்த்திருப்பீங்க. தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கு படங்கள் ரொம்பவும் கிளாமராக தான் இருக்கும். குறிப்பாக பாடல் காட்சிகள் என்றாலே ரொம்பவும் கிளாமராக தான் பண்ணுவாங்க.
அந்த மாதிரி படங்களில் தெலுங்கில் நடித்து விட்டு சில படங்களுக்கு ஆர்கே செல்வமணியை பிரிவ்யூ ஷோவுக்கு நான் அழைத்துக்கொண்டு போனேன். என்னை அவர் காதலித்த காலகட்டம் என்பதால் நான் அழைத்த போது மறுக்காமல் நோ சொல்ல முடியாமல் அவரும் வந்து விட்டார்.
அப்புறம் ஒரு டைம்ல அவரே வெளிப்படையாக சொல்லிட்டார். என்னாலே இதெல்லாம் பார்க்க முடியாது. இனிமே என்னை பிரிவ்யூ ஷோ பார்க்க கூப்பிடாதே என்று கூறிவிட்டார். எனக்கு அது அப்போது புரியலே. தெலுங்கு படங்களை பொருத்த வரை எல்லா ஹீரோயின்ஸ்சுமே கொஞ்சம் கிளாமராக தான் பண்ணி ஆகணும்.
இந்தி இன்டஸ்ட்ரி தெலுங்கு இன்டஸ்ட்ரி எப்படி என்பது தெரிஞ்சதுதானே? கிளாமர் ஃபீல்டுன்னா பிராப்பர் கிளாமர் ஃபீல்டா அது இருக்கும். ஓ எனக்கு அப்போதுதான் தெரிஞ்சது செல்வாவுக்கு இப்படி நான் கிளாமரா நடிக்கிறது ஜெலூஸ் ஆக இருக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன் என்று அந்த நேர்காணலில் நடிகை ரோஜா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





