- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படியும் ஒரு சம்பவமா? - படப்பிடிப்பு தளத்தில் நடிகை சரோஜா தேவிக்கு சுளுக்கு எடுத்த பிரபல...

இப்படியும் ஒரு சம்பவமா? – படப்பிடிப்பு தளத்தில் நடிகை சரோஜா தேவிக்கு சுளுக்கு எடுத்த பிரபல வில்லன் நடிகர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் ஆர்பி விஸ்வம். புது வசந்தம் செண்பகமே செண்பகமே சின்ன ஜமீன் சீவலப்பேரி பாண்டி எங்க ஊரு மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான வில்லனாக வலம் வந்தவர் ஆர் பி விஸ்வம். கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

கருப்பு நாகம் என்று நடிகர் சிவாஜியால் அழைக்கப்பட்ட நடிகர் ஆர்பி விஸ்வம் நடிகை சரோஜாதேவிக்கு சுளுக்கு எடுத்த ஒரு சம்பவம் நடந்துள்ளது. தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரின் ஊரைச் சேர்ந்தவர் ஆர்பி விஸ்வம். அவருக்கு தூரத்து உறவினர். ஆர்பி விஸ்வத்தின் தந்தை பொன்னுசாமி தேவர் சாண்டோ சின்னப்ப தேவரின் நெருங்கிய நண்பர்.

- Advertisement -

இதன் காரணமாக சினிமா ஆசை கொண்ட ஆர் பி விஸ்வம் சான்டோ சின்னப்ப தேவரையே சுற்றி சுற்றி வந்தார். சினிமா உனக்கு சரிப்பட்டு வராது என்று அவரை தேவர் விரட்டியடித்தார். இந்த நிலையில் தேவரின் உடற்பயிற்சி கூடத்தில் ஆர்பி விஸ்வம் வர்மக்கலை கற்றார். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர் சரோஜாதேவி நடித்த படம் குடும்பத் தலைவன். இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை மருதமலை முருகன் கோவிலை சுற்றி நடந்தது.

அந்த படப்பிடிப்பை காண்பதற்காக ஆர்பி விஸ்வமும் அங்கே சென்று இருக்கிறார். அங்குள்ள ஒரு பாறையில் நின்று சரோஜாதேவி ஆடும் போது தவறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு இடுப்பில் சுளுக்கு பிடித்து விட்டது. வலி தாங்க முடியாமல் துடித்தார். அங்கே நின்றிருந்த ஆர்பி விஸ்வம் வர்மக் கலை கற்றவர் என்பதால் ஒரு சிறிய கம்பை கொண்டு வந்து சரோஜாதேவிக்கு இடுப்பில் இருந்த சுளுக்கை சில நிமிடங்களில் எடுத்துவிட்டார்.

- Advertisement -

இடுப்பில் இருந்த சுளுக்கு நீங்கியதால் வலி மறைந்தது. சரோஜாதேவி மீண்டும் உற்சாகமாக நடிக்க தொடங்கினார். இதற்காக விஸ்வத்திற்கு பரிசாக பணமும் அவர் கொடுத்தார். இதை பார்த்த பிறகு சான்டோ சின்னப்ப தேவர் விஸ்வத்தை தனது உதவியாளராக சேர்த்துக்கொண்டார். பல படங்களில் அவர் உதவியாளராக பணிசெய்தார்.

ஆனால் ஆர்பி விஸ்வத்திற்கு நடிகர் ஆர்வமே அதிகமாக இருந்தது. அதற்கான முயற்சிகளில் அவர் இறங்கினார். அதன் பிறகு சினிமாவில் இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவர் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. கரகரப்பான குரலில் அவர் வில்லங்கமாக பேசி நடிப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

- Advertisement -

சற்று முன்