கன்னடத்தில் பல படங்களில் நடித்தவர் ருக்மணி வசந்த். நடிகர் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஆனால் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தில் மாலதி என்ற கேரக்டரில் ருக்மணி வந்த் நாயகியாக நடித்திருந்தார்.
இந்த படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் ருக்மணி வசந்த் மீது தமிழ் சினிமா ரசிகர்களிடம் கவனம் திரும்பியது. இப்போது இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்த காந்தாரா சாப்டர் 1 படத்திலும் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மன்னர் ஜெயராமின் மகளாக இளவரசியாக ருக்மணி வசந்த் மிகவும் அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார்.
ஆரம்பத்தில் அழகான ஒரு இளவரசியாக படத்தில் வலம் வரும் ருக்மணி வசந்த் ஒரு கட்டத்தில் படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி மீது காதல் கொள்கிறார். ஆனால் அவரது காதலை ரிஷப் ஷெட்டி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அலட்சியப்படுத்துகிறார். அதே நேரத்தில் ஈஸ்வர தோட்டத்தை அபகரிக்க தான் அவர் காதல் நாடகம் ஆடுகிறார் என்பதே படத்தின் இறுதியில்தான் தெரிகிறது. கிளைமேக்ஸில் வில்லி நடிப்பில் ருக்மணி வசந்த் மிரட்டியிருக்கிறார்.
ஏஸ் மதராஸி காந்தாரா சாப்டர் 1 படங்களை தொடர்ந்து யஷ் நடித்துவரும் டாக்ஸிக் உள்ளிட்ட சில படங்களில் ருக்மணி வசந்த் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ருக்மணி வசந்த் கூறியதாவது, கிரஷ் என்று என்னை சிலர் அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் அதைப் பற்றி அதிகமாக யோசிப்பதில்லை.
காரணம் அத்தகைய பாராட்டு தற்காலிகமானது என்று நான் நம்புகிறேன்.
காலப்போக்கில் அது மாறிவிடுகிறது. ஆனால் நான் ஒரு விஷயத்தில் மட்டும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பலர் இன்னும் என்னை பிரியா என்று அழைக்கிறார்கள். கன்னடத்தில் சப்தா சாகர தாட்சே யெல்லோ என் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தின் பெயர்தான் பிரியா.
அந்த வேடத்தில் நான் நடிக்கும்போது ரொம்பவும் பயந்தேன். ஆனால் அந்த எளிமையான கேரக்டரை ரசிகர்கள் ரசிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எதிர்காலத்தில் காதல் காமெடி கலந்த கதைகளில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன் என்று நடிகை ருக்மணி வசந்த் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். காந்தாரா சாப்டர் 1 படத்தில் நடித்த பிறகு ருக்மணி வசந்த் இந்திய அளவில் மற்ற மொழிகளிலும் அதிக கவனம் பெற்ற ஒரு முக்கிய நடிகையாக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





