- Advertisement -
காந்தாரா படத்தில் தனது வில்லி நடிப்பில் ரசிகர்களை மிரட்டியவர் கன்னட நடிகை ருக்மணி வசந்த். தமிழில் அவர் நடித்த ஏஸ் மதராஸி போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. டாக்ஸிக் படமும் பெரிய வெற்றியை தரவில்லை. இந்நிலையில் இயக்குனர் பிரேம் குமார் இயக்கிய 96 மற்றும் மெய்யழகன் படங்களை தொடர்ந்து பகத் ஃபாஸில் நடித்துள்ள படம் டிசம்பரில் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு ஸ்டார் நடிகர் நானியுடன் இணைய உள்ளதாகவும் இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க உள்ளதாகவும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





