இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தரின் மூத்த மகன் சிம்பு என்கிற சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அவரது தம்பி குறளரசன், தங்கை இலக்கியா போன்றவர்களுக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்ப வாழ்வில் செட்டிலாகி விட்டனர்.
ஆனால் 40 வயதுகளை கடந்த நிலையில், இன்னும் திருமணம் ஆகாமல் நடிகர் சிம்பு முரட்டு சிங்கிளாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறது. இப்படி திருமண வயது கடந்த நிலையில் இருந்த ஆர்யா பிரேம்ஜி போன்றவர்களுக்கு திருமணமாகி விட்டது. நடிகர் விஷாலுக்கும் வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி நடிகை சாய் தன்ஷிகாவுடன் திருமணம் நடக்க உள்ளது. ஆனால் நடிகர் சிம்புவுக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என்பது சிம்பு ரசிகர்களின் ஏக்கமாக இருந்து வருகிறது.
ஏற்கனவே சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் நடிகர் சிம்பு சிக்கினார். நடிகைகள் ஸ்ருதிஹாசன் நயன்தாரா மற்றும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா போன்றவர்களை சிம்பு காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவர்களில் யாரையுமே சிம்பு திருமணம் செய்துக்கொள்ளவில்லை. தக்லைஃப் படத்தில் நடித்த பிறகு இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
இந்த சூழலில், சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் நடித்து வரும் கோமதி பிரியா என்பவர், தனது வலைதள பக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில், நடிகை திரிஷா அணிந்திருந்த திருமண அலங்கார ஆடையை போன்று அணிந்த நிலையில், கார்த்திக்காக காத்திருக்கிறேன் என்ற பதிவை செய்திருந்தார்.
இதையடுத்து, விண்ணைத்தாடி வருவாயா படத்தில் திரிஷா அந்த உடையில் கார்த்திக் கேரக்டரில் நடித்த சிம்புவை தான் விரும்புவார். அதனால் சீரியல் நடிகை கோமதி பிரியாவுக்கும் நடிகர் சிம்புவுக்கும் காதல். அதனால்தான் அப்படி ஒரு பதிவை அவர் செய்திருக்கிறார். சீரியல் நடிகையை காதலிக்கிறார் நடிகர் சிம்பு என்ற தகவல் இணையத்தில் வைரலானது.
ஆனால் உண்மையில், அந்த பதிவுக்கும் நடிகர் சிம்புவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியாவுக்கும் சிம்புவுக்கும் காதல் இல்லை. அவர் திரிஷா அணிந்த உடை அலங்காரத்தில் இருந்ததால், கார்த்திக்காக காத்திருக்கிறேன் என விளையாட்டாக பதிவு செய்ததை சிம்புவுடன் இணைத்து சிலர் கிளப்பி விட்ட புரளியே என்பது உறுதியாகி உள்ளது.





